முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள்… பிராவோ சாதனையை சமன் செய்தார் சாஹல்

IPL 2023 : ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள்… பிராவோ சாதனையை சமன் செய்தார் சாஹல்

யுஸ்வேந்திர சாஹல் - டுவேன் பிராவோ

யுஸ்வேந்திர சாஹல் - டுவேன் பிராவோ

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சாஹல் அன்மோல்ப்ரீத் சிங், ராகுல் திரிபாதி, ஹெய்ரிக் கிளாசன், எய்டன் மார்க்ரம் ஆகிய முக்கியமான 4 பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை எடுத்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சென்னை அணியின் டுவேன் பிராவோவின் சாதனையை ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் சமன் செய்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் நம்பிக்கைக்குரிய பவுலர்களில் ஒருவாக சாஹல் இருந்து வருகிறார். ஒவ்வொரு மேட்ச்சிலும் எதிரணியின் முக்கிய பேட்ஸ்மேனை ஆட்டமிழக்க செய்து, அணியின் வெற்றியில் கணிசமான பங்களிப்பை தொடர்ந்து செய்து வருகிறார் சாஹல். இந்த நிலையில் நேற்று ஜெய்ப்பூரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பிராவோவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 214 ரன்கள் குவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 35 ரன்னும், ஜோஸ் பட்லர் 95 ரன்னும், கேப்டன் சஞ்சு சாம்சன் 66 ரன்களும் எடுத்தனர். அடுத்து பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி ஆட்டத்தின் கடைசி பந்தில் த்ரில்லிங்கான வெற்றியைப் பெற்றது. ஐபிஎல் போட்டிகளில் மிகச்சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக இது அமைந்தது என வர்ணனையாளர்கள் கூறியுள்ளனர்.

top videos

    சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் யுஸ்வேந்திர சாஹல் அன்மோல்ப்ரீத் சிங், ராகுல் திரிபாதி, ஹெய்ரிக் கிளாசன், எய்டன் மார்க்ரம் ஆகிய முக்கியமான 4 பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை எடுத்தார். ஐபிஎல் தொடர்களில் சென்னை அணியின் டுவேன் பிராவோ 183 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர் என்ற சாதனையை ஏற்படுத்தியிருந்தார். அதனை யுஸ்வேந்திர சாஹல் நேற்று சமன் செய்துள்ளார். இந்த சாதனையை ஏற்படுத்த அவருக்கு 142 ஆட்டங்கள் தேவைப்பட்டது. இதற்கு அடுத்த இடத்தில்  174 விக்கெட்டுகளுடன் பியூஷ் சாவ்லாவும், 172 விக்கெட்டுகளுடன் அமித் மிஷ்ராவும், 171 விக்கெட்டுகளுடன் ரவிச்சந்திரன் அஷ்வினும் பட்டியலில் உள்ளனர்.

    First published:

    Tags: IPL, IPL 2023