முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : ஐதராபாத்திற்கு எதிரான மேட்ச்சில் 214 ரன்கள் குவித்தது ராஜஸ்தான் அணி

IPL 2023 : ஐதராபாத்திற்கு எதிரான மேட்ச்சில் 214 ரன்கள் குவித்தது ராஜஸ்தான் அணி

சஞ்சு சாம்சன் - ஜோஸ் பட்லர்

சஞ்சு சாம்சன் - ஜோஸ் பட்லர்

சாம்சன் மற்றும் பட்லர் ஆகியோர் 2 ஆவது விக்கெட்டிற்கு 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 214 ரன்கள் குவித்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களத்தில் இறங்கினர்.

இருவரும் வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது. 18 பந்துகளில் 2 சிக்சர் 5 பவுண்டரிகள் விளாசிய ஜெய்ஸ்வால் 35 ரன்கள் எடத்து ஆட்டமிழந்தார். அடுத்து இணைந்த சஞ்சு சாம்சன் – ஜோஸ் பட்லர் இணை ரன் குவிப்பில் ஈடுபட்டது. 59 பந்துகளை எதிர்கொண்ட பட்லர் 4 சிக்சர் மற்றும் 10 பவுண்டரியுடன் 95 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

சாம்சன் மற்றும் பட்லர் ஆகியோர் 2 ஆவது விக்கெட்டிற்கு 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 66 ரன்கள் எடுக்க ஹெட்மேயர் 7 ரன்களுடன் களத்தில் நின்றார். 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ராஜஸ்தான் அணி 214 ரன்களை குவித்துள்ளது. இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இல க்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். ஐபிஎல் பாயின்ட்ஸ் டேபிளில் சன்ரைசர்ஸ் அணி 10 ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: IPL, IPL 2023