ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் பாயின்ட்ஸ் டேபிளில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். அகமதாபத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை முதலில் தேர்வுசெய்தார். இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக ரிதிமன் சாஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களத்தில் இறங்கினர். சாஹா 4 ரன்னில் வெளியேற அடுத்து இணைந்த கில் – சாய் சுதர்சன் இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது.
கில் 45 ரன்னும், சாய் சுதர்சன் 20 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்ட்யா 28 ரன்கள் சேர்க்க அதிரடியாக விளையாடிய டேவிட் மில்லர் 46 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த குஜராத் டைட்டன்ஸ் அணி 177 ரன்களை எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி வீரர்கள் விளையாடத் தொடங்கினர்.
ஓபனிங் பேட்ஸ்மேன்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 1 ரன்னிலும், ஜோஸ் பட்லர் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்தனர். 4 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையில் ராஜஸ்தான் அணி இருந்தபோது, தேவ்தத் படிக்கல் – கேப்டன் சாம்சன் இணை சரிவை சரி செய்தது. படிக்கல் 26 ரன்னில் வெளியேற, சாம்சன் வழக்கமான அதிரடியால் குஜராத் பந்துவீச்சை சிதறடித்தார். 32 பந்துகளை எதிர்கொண்ட அவர் 6 சிக்சர் மற்றும் 3 பவுண்டரியுடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் குஜராத் பவுலிங்கை வெளுத்தெடுத்த ஷிம்ரோன் ஹெட்மையர் 26 பந்தில் 5 சிக்சர் 2 பவுண்டரியுடன் 56 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். த்ருவ் ஜுரெல் 18 ரன்னும், ரவிச்சந்திரன் அஷ்வின் 10ரன்களும் சேர்த்தனர். 19.2 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் மொத்தம் 4 வெற்றிகளுடன் ராஜஸ்தான் அணி பாயின்ட்ஸ் டேபிளில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.