முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : ஆர்.சி.பி.யிடம் விளையாடும் மழை… வானிலை தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி

IPL 2023 : ஆர்.சி.பி.யிடம் விளையாடும் மழை… வானிலை தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி

போட்டி நடைபெறும் பெங்களூரு சின்னசாமி மைதானம்

போட்டி நடைபெறும் பெங்களூரு சின்னசாமி மைதானம்

தொடர்ச்சியாக இடையூறு இல்லாமல் ஆட்டம் நடைபெற வாய்ப்பு குறைவாகவே உள்ளதால், ஆர்.சி.பி. ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றான ப்ளே ஆஃப்-க்குள் பெங்களுரு அணி செல்ல முடியும். தோல்வி அடைந்தாலோ அல்லது மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டாலோ தொடரிலிருந்து பெங்களூரு வெளியேறிவிடும். இதனால் அந்த அணிக்கு இந்த போட்டி மிக முக்கியமானது என்பதால், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இதற்கிடையே பெங்களூருவில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்றும் தொடர்ந்தது. இதனால் 7 மணிக்கு போடப்பட வேண்டிய டாஸ், 7.45-க்கு நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து 8 மணிக்கு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மழை மீண்டும் குறுக்கிட்டது. இதைத் தொடர்ந்து 8.25-க்கு மேட்ச் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

top videos

    தொடக்க வீரர்களாக விராட் கோலியும், ஃபாஃப் டூப்ளசிசும் களத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் 9 மணிக்கு மழை பெய்ய 65 சதவீதமும், 10 மணிக்கு 40 சதவீதமும், 11 மணிக்கு 34 சதவிதமும், 12 மணிக்கு 27 சதவீதமும் வாய்ப்புள்ளதாக வானிலை தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் தொடர்ச்சியாக இடையூறு இல்லாமல் ஆட்டம் நடைபெற வாய்ப்பு குறைவாகவே உள்ளதால், ஆர்.சி.பி. ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தற்போது வரை ப்ளே ஆஃப் குவாலிபையர் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன. எலிமினேட்டர் சுற்றில் விளையாட லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. இன்னொரு அணி எது என்பது இன்று தெரிந்து விடும் .

    First published:

    Tags: IPL, IPL 2023