முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 Final : ‘ஐபிஎல் ஃபைனல் இன்று நடைபெறுமா?’ – அப்டேட் கொடுத்த வெதர்மேன்…

IPL 2023 Final : ‘ஐபிஎல் ஃபைனல் இன்று நடைபெறுமா?’ – அப்டேட் கொடுத்த வெதர்மேன்…

தோனி - ஹர்திக் பாண்ட்யா

தோனி - ஹர்திக் பாண்ட்யா

இரவு 9.56-க்குள் மழை நின்று விட்டால் ஓவர் எண்ணிக்கை குறைக்கப்படாது. 9.56-க்கு மேல் மழை பெய்து 11.56க்குள் நின்று விட்டால் 5 ஓவர் போட்டியாக நடத்தப்படும்

  • 1-MIN READ
  • Last Updated :
  • Gujarat, India

மழை காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மேட்ச் தொடங்கும் நேரம் குறித்து தனியார் வானிலை ஆய்வாளரான வெதர் மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் அப்டேட் கொடுத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அடுத்த சில நிமிடங்களில் மழை பெய்வது நின்று, சாரல் வீசும். மேட்ச் சரியாக 9 மணிக்கு தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம்’ என்று கூறியுள்ளார்.

மழை பெய்து விளையாடவில்லை என்றால் ஐபிஎல் 2023 இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் நாள் உள்ளதா என்று ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. 2022-ல் இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் நாள் இருந்தது. ஆனால் பிசிசிஐ வெளியிட்ட பிளேஆஃப் அட்டவணையின்படி ஐபிஎல் 2023 இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் நாள் இல்லை. இந்நிலையில் தற்போது ரிசர்வ் நாள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பதால் மேட்ச் இன்று கைவிடப்பட்டாலும் நாளை நடைபெறும்.

தற்போதைய சூழலில் இரவு 9.56-க்குள் மழை நின்று விட்டால் ஓவர் எண்ணிக்கை குறைக்கப்படாது. 9.56-க்கு மேல் மழை பெய்து 11.56க்குள் நின்று விட்டால் 5 ஓவர் போட்டியாக நடத்தப்படும்.

First published:

Tags: IPL, IPL 2023