முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 :விடாமல் பெய்யும் மழை… ப்ளே ஆஃப் செல்வதில் பெங்களூரு அணிக்கு சிக்கல்?

IPL 2023 :விடாமல் பெய்யும் மழை… ப்ளே ஆஃப் செல்வதில் பெங்களூரு அணிக்கு சிக்கல்?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றால் 16 புள்ளிகளைப் பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும்

  • Last Updated :
  • Tamil Nadu, India

பெங்களூருவில் மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் இன்று நடைபெறவுள்ள பெங்களூரு – குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள்  சென்று விடலாம் என்ற சூழலில், மழை குறுக்கிட்டுள்ளதால் பெங்களூரு அணி மற்றும் அதன் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். பெங்களூரு சுற்று வட்டாரத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே இன்றிரவு 7.30க்கு தொடங்க உள்ளது.

ப்ளே ஆஃப் சுற்றுக்குள் ஏற்கனவே சென்று விட்ட குஜராத் டைட்டன்ஸ் அணி எந்த விதநெருக்கடியும் இல்லாமல் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது. அதேநேரம் பாயின்ட்ஸ் டேபிளில் 14 புள்ளிகளைப் பெற்றுள்ள பெங்களூரு அணி 4 ஆவது இடத்தை பிடித்துள்ளது. மழை குறுக்கிட்டால் குஜராத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு தலா 1 புள்ளிகள் அளிக்கப்படும். இதன் அடிப்படையில் 15 புள்ளிகளை பெங்களூரு பெறும்.

இதையும் படிங்க - IPL 2023 : அறிமுக போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்… ஐதராபாத்தின் விவ்ரந்த் சர்மா சாதனை

இருப்பினும் இன்று நடைபெற்று வரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றால் 16 புள்ளிகளைப் பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும். இந்த ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்த சூழலில் பெங்களூரு அணி இன்று விளையாடி வெற்றி பெற வேண்டும். இல்லாவிட்டால் மும்பை அணி ப்ளே ஆஃப் சென்று விடும். அந்த வகையில் இன்று போட்டி நடைபெற்று பெங்களூரு அணி வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

First published:

Tags: IPL, IPL 2023