முகப்பு /செய்தி /விளையாட்டு / பெங்களூருவில் மழைக்கு வாய்ப்பு... ஆர்சிபியின் ப்ளேஆப் கனவு கலையுமா? ரசிகர்கள் சோகம்

பெங்களூருவில் மழைக்கு வாய்ப்பு... ஆர்சிபியின் ப்ளேஆப் கனவு கலையுமா? ரசிகர்கள் சோகம்

கோலி

கோலி

பெங்களூருவில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதால் ஆர்.சி.பியின் ப்ளேஆப் முயற்சிக்கு சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.

  • Last Updated :
  • Bangalore Rural, India

பெங்களூருவில் இன்று மழை பெய்யும் வாய்ப்புள்ளதால் ஆர்.சி.பியின் ப்ளேஆப் கனவு இல்லாமல் போகும் என்று ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஐ.பி.எல் 2023 தொடர் மார்ச் 31-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. ஐ.பி.எல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்றுடன் லீக் போட்டிகள் முடிவடைகின்றன. ப்ளேஆப் சுற்றுக்கு ஏற்கெனவே மூன்று அணிகள் தகுதி பெற்றுள்ளன. குஜராத் அணி முதலிடத்திலும், சென்னை அணி இரண்டாம் இடத்திலும் லக்னோ அணி மூன்றாம் இடத்திலும் உள்ளது. தற்போது நான்காவது இடத்தைப் பிடிக்க மும்பை மற்றும் பெங்களூரு அணிக்கு இடையே போட்டி நிலவுகிறது.

இன்று இரு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் முதலாவது போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை எதிர்கொள்ளவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் மும்பை அணி கட்டாயம் வெற்றிபெறவேண்டும் என்ற நிலையில் களம் காண்கிறது. அது மட்டுமல்லாமல் அதிக நெட் ரன்ரேட்டில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றை அவ்வணி பிரகாசப்படுத்த முடியும். ஐதராபாத்தை பொறுத்தவரை கடைசி இடமான 10 ஆவது இடத்தில் உள்ள அவ்வணி இதில் வெற்றி பெற்றால் 9ஆவது இடத்தை பெற்று ஆறுதல் தேடிக்கொள்ள முடியும்.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் மற்றொரு போட்டியில் ஆர்சிபி மற்றும் முதலிடத்தில் உள்ள குஜராத் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இன்றைய முதல் போட்டியில் மும்பை அணி பிரமாண்ட வெற்றியைப் பெறும் பட்சத்தில் இப்போட்டியில் ஆர்சிபி அணி அதைவிட பிரமாண்ட வெற்றியை பெறவேண்டும். மாறாக மும்பை அணி தோற்கும் பட்சத்தில் ஆர்சிபி அணி போட்டியை வெறுமனே வென்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு சென்றுவிட முடியும். இரு அணிகளுக்கும் இப்போட்டிகள் முக்கியமானதாக உள்ளதால் இன்றைய போட்டிகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

கடைசி ஓவர் த்ரில்... 1 ரன் வித்தியாசத்தில் லக்னோ வெற்றியை சாத்தியமாக்கியது எப்படி?

ஆனால், பெங்களூரு அணிக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வானிலை நிலவரம் உள்ளது. பெங்களூருவில் இன்று மாலையில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று வானிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

top videos

    இந்த அறிவிப்பு பெங்களூரு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று மழை பெய்து போட்டி தடைபடும் நிலையில் இரு அணிகளுக்கும் தலா ஒரு பாயிண்ட் வழங்கப்படும். அப்படி, நடக்கும்பட்சத்தில் மும்பை அணி ஐதராபாத்தை வெற்றபெற்றால் மும்பை ப்ளேஆப் சுற்றுக்குத் தகுதிபெறும். பெங்களூரு அணி வெளியேறிவிடும்.

    First published:

    Tags: IPL 2023, RCB