முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : ஃபைனலில் சென்னையுடன் மோதப்போவது யார்? மும்பை – குஜராத் அணிகள் இன்று மோதல்

IPL 2023 : ஃபைனலில் சென்னையுடன் மோதப்போவது யார்? மும்பை – குஜராத் அணிகள் இன்று மோதல்

ஹர்திக் பாண்ட்யா - ரோஹித் சர்மா

ஹர்திக் பாண்ட்யா - ரோஹித் சர்மா

எலிமினேட்டர் சுற்றில் லக்னோ அணியை வீழ்த்திய உற்சாகத்துடன் மும்பை அணி இன்று களம் காண்கிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் மோதப் போகும் அணி எது என்பது இன்று தீர்மானிக்கப்படவுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி சென்னையுடன் நாளை மறுதினம் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. மும்பை மற்றும் குஜராத் அணிகள் சம பலம் மிக்கவை என்பதால் இந்த போட்டி மிகுந்த விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூரில் நடைபெறும் போட்டி காரணமாக குஜராத் அணிக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகம் இருக்கும். அதே நேரம் சென்னை அணிக்கு எதிரான மேட்சில் 172 ரன்கள் குறைவான ஸ்கோரையே சேஸிங் செய்ய முடியாமல் குஜராத் அணி தோல்வியடைந்துள்ளது. மும்பை அணியை பொருத்தவரையில் எலிமினேட்டர் சுற்றில் லக்னோ அணியை வீழ்த்திய உற்சாகத்துடன் இன்று களம் காண்கிறது. குஜராத் அணியின் பேட்டிங் வரிசை பலமாக இருந்தாலும், கடந்த போட்டியில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவின் தவறான சில முடிவுகளால் அணி தோல்வியை தழுவியது.

ஒப்பீட்டளவில் இரு அணிகளும் சம பலம் மிக்கவையாக இருந்தாலும் களத்தில் இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணியே வெற்றி பெறும். குஜராத் அணியில் இன்று விளையாடும் வீரர்களின் உத்தேச பட்டியல்- ரிதிமான் சாஹா, சுப்மான் கில், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், நூர் அகமது, மோகித் சர்மா, முகமது ஷமி, யாஷ் தயாள்

top videos

    மும்பை அணியில் இன்று விளையாடும் வீரர்களின் உத்தேச பட்டியல் - ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், ஹிருத்திக் ஷோக்கீன், கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஆகாஷ் மத்வால்

    First published:

    Tags: IPL, IPL 2023