முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி பேட்டிங்!!

IPL 2023 : கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி பேட்டிங்!!

பஞ்சாப் அணி வீரர்கள் ஷிகர் தவான் - ஷாரூக்கான்

பஞ்சாப் அணி வீரர்கள் ஷிகர் தவான் - ஷாரூக்கான்

இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் பாயின்ட்ஸ் டேபிளில் 4 ஆவது இடத்திற்கு முன்னேறி ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டி இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்த மேட்ச்சாக பார்க்கப்படுகிறது. இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் பஞ்சாப் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று பாயின்ட்ஸ் டேபிளில் 7 ஆவது இடத்திலும், கொல்கத்தா அணி 10 போட்டிகளில் 4 இல் வெற்றி பெற்று 8 ஆவது இடத்திலும் உள்ளன. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் பாயின்ட்ஸ் டேபிளில் 4 ஆவது இடத்திற்கு முன்னேறி ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளும்.

கொல்கத்தா அணி வீரர்கள் - ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா , ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, சுயாஷ் சர்மா, வருண் சக்கரவர்த்தி

பஞ்சாப் அணி வீரர்கள் - பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான், பானுகா ராஜபக்சே, லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, சாம் கரன், ஷாருக் கான், ஹர்பிரீத் ப்ரார், ரிஷி தவான், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்

First published:

Tags: IPL, IPL 2023