முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி…

IPL 2023 : லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி…

பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஷாரூக்கான்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஷாரூக்கான்

இந்த வெற்றியின் மூலம் 5 இல் 3 போட்டிகளில் வெற்றி பெற்று பஞ்சாப் கிங்ஸ் அணி பாயின்ட்ஸ் டேபிளில் 4 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி லக்னோவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார். இதையடுத்து லக்னோ அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக கேப்டன் ராகுல், கைல் மேயர்ஸ் களத்தில் இறங்கினர். 29 ரன்கள் சேர்த்த போது மேயர்ஸ் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தீபக் ஹூடா 2 ரன்னில் வெளியேற க்ருனல் பாண்ட்யா 18 ரன்களும், நிகோலஸ்  பூரன் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

அதிரடி பேட்ஸ்மேன் ஸ்டாய்னிஸ் 15 ரன்கள் எடுத்தால் விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்தாலும் கேப்டன் கே.எல்.ராகுல் பொறுபபுடன் விளையாடி ரன்களை சேர்த்தார். 56 பந்துகளை எதிர்கொண்ட அவர் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 158 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் சாம் கரன் 3 விக்கெட்டுகளையும், கசிகோ ரபடா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி வீரர்கள் மோசமான தொடக்கதை ஏற்படுத்தினர். ஓபனிங் பேட்ஸ்மேன் அதர்வா டைடே ரன் ஏதும் எடுக்காமலும், பிரப்சிம்ரன் சிங் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் விளையாடிய மேத்யூ ஷார்ட் 34 ரன்கள் சேர்த்தார். ஹர்ப்ரீத் சிங் 22 ரன்களும், சிக்கந்தர் ராசா 57 ரன்களும் எடுக்க அணி வெற்றிப் பாதையை நோக்கி திரும்பியது.

கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஷாரூக்கான் 10 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டத்தை ஃபினிஷிங் செய்தார். 19.3 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 இல் 3 போட்டிகளில் வெற்றி பெற்று பஞ்சாப் கிங்ஸ் அணி பாயின்ட்ஸ் டேபிளில் 4 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

First published:

Tags: IPL, IPL 2023