முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : மும்பைக்கு எதிரான எலிமினேட்டர் மேட்ச்சில் லக்னோ அணி வெற்றி பெற 183 ரன்கள் இலக்கு…

IPL 2023 : மும்பைக்கு எதிரான எலிமினேட்டர் மேட்ச்சில் லக்னோ அணி வெற்றி பெற 183 ரன்கள் இலக்கு…

க்ருணல் பாண்ட்யா - ரோஹித் சர்மா

க்ருணல் பாண்ட்யா - ரோஹித் சர்மா

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் வெள்ளியன்று நடைபெறவுள்ள குவாலிபையர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ளும்

  • Last Updated :
  • Tamil Nadu, India

மும்பை அணிக்கு எதிரான எலிமினேட்டர் மேட்ச்சில் லக்னோ அணி வெற்றி பெற 183 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா களத்தில் இறங்கினர்.

மும்பை அணிக்கு மிக முக்கியமான இந்த ஆட்டத்தில் இஷான் கிஷன் 15 ரன்னும், ரோஹித் சர்மா 11 ரன்னும் எடுத்து மோசமான தொடக்கத்தை கொடுத்தனர். அடுத்து வந்த கேமரூன் கிரீன் மற்றும் சூர்யகுமார் இணை தொடக்க சரிவில் இருந்து அணியை மீட்டெடுத்து 3 ஆவது விக்கெட்டிற்கு 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கிரீன் 23 பந்துகளில் 1 சிக்சர் மற்றும் 6 பவுண்டரியுடன் 41 ரன்கள் எடுத்த ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 33 ரன்கள் சேர்க்க, அதிரடி பேட்ஸ்மேன் டிம் டேவிட் 13 ரன்கள் ஏமாற்றம் அளித்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 182 ரன்கள் எடுத்தது.

இதையும் படிங்க - IPL Qualifier : சென்னை அணியின் வெற்றிக் கொண்டாட்ட வீடியோக்கள் வைரல்…

top videos

    ரோஹித் சர்மா, கேமரூன் கிரீன் மற்றும் சூர்யகுமார் யாதவ் விக்கெட்டுகளை கைப்பற்றிய லக்னோ அணியின் நவீன் உல் ஹக் மும்பை அணியின் ரன் குவிப்பு வேகத்தை கட்டுப்படுத்தினார். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் வெள்ளியன்று நடைபெறவுள்ள குவாலிபையர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ளும்

    First published:

    Tags: IPL, IPL 2023