முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : ‘நாங்கள் வகுத்த வியூகம் எங்களுக்கு எதிராகவே திரும்பி விட்டது’ – பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான்

IPL 2023 : ‘நாங்கள் வகுத்த வியூகம் எங்களுக்கு எதிராகவே திரும்பி விட்டது’ – பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான்

ஷிகர் தவான்

ஷிகர் தவான்

பஞ்சாப் கிங்ஸ் அணி அடுத்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை நாளை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக தாங்கள் வகுத்த வியூகம் தங்களுக்கு எதிராகவே திரும்பி விட்டதாக தோல்விக்கு பின்னர் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் கூறியுள்ளார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்களை எடுத்தது. அடுத்து விளையாடிய பஞ்சாப் அணியால் 201 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் தோல்விக்கு பின்னர் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான ரன்களை எதிரணிக்கு விட்டுக் கொடுத்து விட்டோம். கூடுதல் பவுலர் ஒருவருடன் இந்த போட்டியில் விளையாடினோம். இதுதான் எங்கள் அணியின் வியூகமாக இருந்தது. ஆனால் இந்த வியூகமே களத்தில் எங்களுக்கு எதிராக திரும்பி விட்டது. பேட்டிங் லைன் அப்பிலும் சில குளறுபடிகள் ஏற்பட்டு விட்டன.

top videos

    பேட்டிங் லைனில் சாம்கரன், லிவிங்ஸ்டோன் ஆகியோர் இருந்ததால் ஷாரூக்கானை முன்னரே களத்தில் இறக்க முடியவில்லை. இலக்கு அதிகமாக இருந்தாலும் சேஸிங்கில் 201 ரன்கள் எடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். பஞ்சாப் கிங்ஸ் அணி அடுத்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை நாளை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    First published:

    Tags: IPL, IPL 2023