முகப்பு /செய்தி /விளையாட்டு / “மனசோ இப்போ தந்தியடிக்குது”... ஐபிஎல் பிரமாண்ட தொடக்க விழா... நடனமாடி அசத்திய தமன்னா, ராஷ்மிகா...!

“மனசோ இப்போ தந்தியடிக்குது”... ஐபிஎல் பிரமாண்ட தொடக்க விழா... நடனமாடி அசத்திய தமன்னா, ராஷ்மிகா...!

தாமன்னா மற்றும் ரஷ்மிகா மந்தானா

தாமன்னா மற்றும் ரஷ்மிகா மந்தானா

IPL 2023 Opening Ceremony | 16வது ஐபிஎல் தொடரில் தொடக்க விழாவில் நடிகை தமன்னா மற்றும் ரஷ்மிகா மந்தானாவின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

  • Last Updated :
  • Ahmadabad, India

16வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி, நான்கு முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை அணி மோதின. அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானமான, நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கியது. அதற்கு முன்னதாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதில் பாலிவுட் நடிகர் ஆர்ஜித் சிங் இந்தி பாடல்களை பாடினார். இதனைத் தொடர்ந்து நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் தமன்னா ஆகியோரின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பல்வேறு மாநில சினிமாக்களின் பாடலுக்கு ஆடி அனைவரின் கவனத்தை ஈர்த்தனர். குறிப்பாக எனிமி படத்தில் தமன் இசையில் பிரபலமடைந்த ”மால டம் டம் மத்தலம் டம் டம் பாடலுக்கு நடனமாடினார்.

அதனைத் தொடர்ந்து நடிகை ராஷ்மிகா, அண்மையில் ஆஸ்கர் வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் அவர் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் சாமி சாமி பாடலுக்கு நடனமாடினார்.

top videos

    கடந்த 4 ஆண்டுகளாக ஐபிஎல் தொடக்க விழாவில் தொடக்க விழா எதும் நடைபெறாமல் இருந்த நிலையில் இந்தாண்டு ஏற்பாடு செய்திருந்த கலை நிகழ்ச்சிகளை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர்.

    First published:

    Tags: Actress Rashmika Mandanna, IPL 2023