முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : திறமை மிக்க இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் திணறும் டெல்லி அணி….

IPL 2023 : திறமை மிக்க இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் திணறும் டெல்லி அணி….

டெல்லி கேபிடல்ஸ் அணி

டெல்லி கேபிடல்ஸ் அணி

வெளிநாட்டு வீரர்களான நோட்ஜ் மற்றும் லுங்கி நிகிடி ஆகியோர் நல்ல ஃபார்மில் இருந்தாலும் அவர்கள் தற்போது உடனடியாக இந்தியா வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது

  • Last Updated :
  • Tamil Nadu, India

திறமை மிக்க இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் டெல்லி அணி திணறி வருகிறது. வலுவான குஜராத் டைட்டன்ஸ் அணியை நாளை எதிர்கொள்ளவுள்ள நிலையில் டெல்லி தனது முதல் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணி தான் விளையாடிய முதல் போட்டியில் லக்னோ அணியிடம் தோற்று 9 ஆவது இடத்திற்கு சென்றுள்ளது. இந்த அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பந்த்திற்கு விபத்தில் காயம் ஏற்பட்டத்தை தொடர்ந்து அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் கேப்டனாக செயல்படுகிறார்.

இருப்பினும் இந்திய பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் மற்றும் அணியின் கேப்டன் என 3 விதமான பொறுப்புகளை வகித்த ரிஷப் பந்த் இடம்பெறாதது டெல்லி அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று திறமை மிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாதது அணியின் பலவீனமாக பார்க்கப்படுகிறது. அணியில் சேட்டன் சகாரியா, முகேஷ் குமார் போன்ற வீரர்கள் இருப்பினும் போதிய அனுபவம் இல்லாததால் அவர்கள் அதிக ரன்களை வாரிக் கொடுக்கின்றனர்.

எதிரணியான குஜராத் டைட்டன்ஸில் சுப்மன் கில்,, கைல் மேயர்ஸ், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட அதிரடி ஆட்டக்காரர்கள் இருப்பதால் இவர்களை சமாளிக்க போதிய பந்துவீச்சாளர்கள் டெல்லி அணியில் இல்லாத சூழலே ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு வீரர்களான நோட்ஜ் மற்றும் லுங்கி நிகிடி ஆகியோர் நல்ல ஃபார்மில் இருந்தாலும் அவர்கள் தற்போது உடனடியாக இந்தியா வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பேட்டிங்கை பொருத்தளவில் கேப்டன் டேவிட் வார்னர், பிரித்வி ஷா, சர்ப்ராஸ் கான் ஆகியோர் மட்டுமே குறிப்பிடத்தகுந்த அளவில் உள்ளனர். இதனால்  நாளை நடைபெறவுள்ள போட்டியில் குஜராத் அணியே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள்

டேவிட் வார்னர் (கேப்டன்), பிருத்வி ஷா, ரிபால் படேல், ரோவ்மன் பவல், சர்பராஸ் கான், யாஷ் துல், மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், அக்சர் படேல், அன்ரிச் நார்ட்ஜே, சேத்தன் சகாரியா, கமலேஷ் நாகர்கோடி, கலீல் அகமது, லுங்கி நிகிடி, முஸ்தபிசுர் ரஹ்மான், அமான் , குல்தீப் யாதவ், பிரவீன் துபே, விக்கி ஓஸ்ட்வால், இஷாந்த் ஷர்மா, ஃபில் சால்ட், முகேஷ் குமார், மணீஷ் பாண்டே, ரிலீ ரோசோவ்.

First published:

Tags: IPL, IPL 2023