ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லியில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியும் என்பதால் சென்னை அணிக்கு இந்த போட்டி மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. சென்னை அணி கடைசியாக கடந்த ஞாயிறன்று விளையாடியது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதேபோன்று டெல்லி அணி கடைசியாக நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
இந்த போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் வார்னர், பிரித்வி ஷா, ரிலே ரூசோ, விக்கெட் கீப்பர் பிலிப் சால்ட் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களுடன் அக்சர் படேல், அமான் ஹகிம், யாஷ் துலி ஆகியோரும் பேட்டிங்கில் ரன்களை குவிப்பவர்கள் என்பதால் டெல்லி அணியின் பேட்டிங் வரிசை ஓரளவு பலமாக இருக்கிறது. பவுலிங்கில் இஷாந்த் சர்மா அதிக ரன்களை விட்டுக் கொடுத்தாலும் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார். அவருடன் நோர்கியா, கலீல் அகமது, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டால் சென்னை அணியின் ரன் குவிப்பு வேகத்தை கட்டுப்படுத்த முடியும்.
ஐபிஎல் Play off ரேஸ்.. மல்லுக்கட்டும் அணிகள் - யார் உள்ளே.. யார் வெளியே?
உள்ளூரில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளதால் டெல்லி அணிக்கு ஆதரவு வலுவாக இருக்கும். சென்னை அணியில் பேட்டிங் வரிசையில் ருதுராஜ் கெய்க்வாட், கான்வே, அஜிங்யா ரஹானே, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, மொயின் அலி, ரவிந்திர ஜடேஜா, தோனி என 8 பேரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள். இவர்களில் குறைந்தது 4 பேர் ரன் குவிப்பில் ஈடுபட்டால் சென்னை அணியால் பெரிய ஸ்கோரை எடுக்க முடியும். பந்துவிச்சில் தீபக் சாஹர், துஷார் பாண்டே, தீக்சனா, மதிஷா பதிரனா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது டெல்லி அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக அமையும்.
ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட விவகாரம் - அடுத்த வாரம் நீதிமன்றத்தில் விசாரணை?
ஒப்பீட்டளவில் சென்னை அணியை விட டெல்லி பலவீனமாக காணப்படுகிறது. இருப்பினும் இந்த மேட்ச்சில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்பதால் சென்னை அணிக்கு சிறிது நெருக்கடி இருக்கலாம். ஏற்கனவே ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்த டெல்லி அணி, கடந்த போட்டியில் பஞ்சாபின் வாய்ப்பை பறித்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.