முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி பவுலிங்!!

IPL 2023 : பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி பவுலிங்!!

மும்பை இந்தியன்ஸ் அணி

மும்பை இந்தியன்ஸ் அணி

மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் இன்று தங்களது 11 ஆவது போட்டியில் விளையாடுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி 2 புள்ளிகள் பெற்று 12 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திற்கு முன்னேறும்

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பாயின்ட்ஸ் டேபிளில் 3 ஆவது இடத்திற்கு முன்னேறும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் இன்று தங்களது 11 ஆவது போட்டியில் விளையாடுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி 2 புள்ளிகள் பெற்று 12 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திற்கு முன்னேறும்.

பெங்களூரு அணியில் இன்று விளையாடும் வீரர்கள் - விராட் கோலி, ஃபாஃப் டூப்ளசிஸ், அனுஜ் ராவத், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக்(வ), வனிந்து ஹசரங்கா, ஹர்சல் படேல், விஜய்குமார் வைஷாக், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்

மும்பை அணியில் விளையாடும் வீரர்கள்- ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹால் வதேரா, கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்

top videos

    இன்றைய ஆட்டம் மும்பையில் நடைபெறுவதால் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் மும்பை அணி வெற்றி பெற முனைப்பு காட்டும். சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி மோசமான தோல்வியை அடைந்த நிலையில், அடுத்து நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. கடந்த சனியன்று நடந்த போட்டியில் டெல்லியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: IPL, IPL 2023