முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சை தேர்வு செய்தது மும்பை இந்தியன்ஸ்

IPL 2023 : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சை தேர்வு செய்தது மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணி

மும்பை இந்தியன்ஸ் அணி

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் இந்த போட்டியின் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அறிமுகம் ஆகிறார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுகிறார். மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் இந்த போட்டியின் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அறிமுகம் ஆகிறார்.  இந்த போட்டி மும்பை வான்கிடே மைதானத்தில் தொடங்கியுள்ளது.

கொல்கத்தா அணியில் இன்று விளையாடும் வீரர்கள்- ரஹ்மானுல்லா குர்பாஸ்(விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், என்.ஜெகதீசன், நிதிஷ் ராணா(கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், லாக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி. மும்பை அணியில் இன்று விளையாடும் வீரர்கள் - இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), டிம் டேவிட், நேஹால் வதேரா, அர்ஜுன் டெண்டுல்கர், ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, துவான் ஜான்சன், ரிலே மெரிடித்

top videos

    பாயின்ட்ஸ் டேபிளில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 1 இல் மட்டுமே வெற்றி பெற்று 9 ஆவது இடத்தில் உள்ளது. நெட் ரன்ரேட்டும் -0.879 என பலவீனமாக இருப்பதால், மும்பை அணி வெற்றி மற்றும் அதிக ரன் அல்லது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது அவசியமாக உள்ளது. இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று +0.711 நெட் ரன் ரேட்டுடன் 5 ஆவது இடத்தில் உள்ளது. மும்பை அணியில் கடந்த சில சீசன்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சூர்ய குமார் யாதவ், இந்த சீசனில் ரன் குவிக்க தவறியுள்ளார். ஐசிசி தரவரிசையில் டி20 போட்டிகளில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் சூர்ய குமார் யாதவ், ஐபிஎல் தொடரில் பலவீனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது மும்பை ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    First published:

    Tags: IPL, IPL 2023