முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதல்

IPL 2023 : மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதல்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் சூர்ய குமார் யாதவ் 3 போட்டிகளிலும் 0 ரன்களை எடுத்து கடும் விமர்சனத்திற்கு ஆளாகியிருந்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் மும்பையில் மாலை 3.30 மணியளவில் தொடங்கவுள்ளது. பெங்களூரு அணியின் முக்கிய ஆட்டக்காரர்கள் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், கொல்கத்தாவை அந்த அணி எதிர்கொள்கிறது. பாயின்ட்ஸ் டேபிளில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 1 இல் மட்டுமே வெற்றி பெற்று 9 ஆவது இடத்தில் உள்ளது. நெட் ரன்ரேட்டும் -0.879 என பலவீனமாக இருப்பதால், மும்பை அணி வெற்றி மற்றும் அதிக ரன் அல்லது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது அவசியமாக உள்ளது.

இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று +0.711 நெட் ரன் ரேட்டுடன் 5 ஆவது இடத்தில் உள்ளது. மும்பை அணியில் கடந்த சில சீசன்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சூர்ய குமார் யாதவ், இந்த சீசனில் ரன் குவிக்க தவறியுள்ளார். ஐசிசி தரவரிசையில் டி20 போட்டிகளில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் சூர்ய குமார் யாதவ், ஐபிஎல் தொடரில் பலவீனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது மும்பை ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் சூர்ய குமார் யாதவ் 3 போட்டிகளிலும் 0 ரன்களை எடுத்து கடும் விமர்சனத்திற்கு ஆளாகியிருந்தார். இந்த ஐபிஎல் சீசனில் 3 போட்டிகளில் 15, 1, 0 ரன்களை மட்டுமே சூர்ய குமார் எடுத்திருக்கிறார். இந்த போட்டியில் அவர் ஃபார்முக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பில் மும்பை அணியின் ரசிகர்கள் உள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் எதிர்பார்பார்க்கப்படும் உத்தேச வீரர்கள் - 1 ரோகித் சர்மா (கேப்டன்), 2 இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), 3 சூர்யகுமார் யாதவ், 4 கேமரூன் கிரீன், 5 திலக் வர்மா, 6 நேஹல் வதேரா, 7 ஹிருத்திக் ஷோக்கீன், 8 அர்ஷத் கான், 9 பியூஷ் சாவ்லா, 10 ரிலே மெரிடித், 11 ஜேசன் பெஹ்ரென்டாஃப்

கொல்கத்தா அணியில் இடம்பெறும் உத்தேச வீரர்கள் - 1 ரஹ்மானுல்லா குர்பாஸ். 2. என். ஜெகதீசன், 3 நிதிஷ் ராணா (கேப்டன்), 4 ஆண்ட்ரே ரசல்/டேவிட் வைஸ், 5 ரிங்கு சிங், 6 ஷர்துல் தாக்கூர், 7 சுனில் நரேன், 8 லாக்கி பெர்குசன், 9 உமேஷ் யாதவ், 10 வருண் சக்கரவர்த்தி, 11. சுயாஷ் சர்மா

top videos
    First published:

    Tags: IPL, IPL 2023