முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மும்பை – பெங்களூரு அணிகள் இன்று மோதல்…

IPL 2023 : ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மும்பை – பெங்களூரு அணிகள் இன்று மோதல்…

டூப்ளசிஸ் - ரோஹித் சர்மா

டூப்ளசிஸ் - ரோஹித் சர்மா

இன்னும் ஒவ்வொரு அணியும் தலா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடவுள்ளதால் அனைத்து ஆட்டங்களும் மிகவும் விறுவிறுப்பாக அமையப் போகின்றன

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டி மும்பை வான்கிடே மைதானத்தில் இன்றிரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பாயின்ட்ஸ் டேபிளில் 3 ஆவது இடத்திற்கு முன்னேறும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதிக் கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் மோதவுள்ள நிலையில், மும்பை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் டெல்லி அணிகளை தவிர்த்து மற்ற அணிகள் 11 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன. இதில் 16 புள்ளிகளுடன் குஜராத் அணி முதலிடத்திலும், 13 புள்ளிகளுடன் சென்னை அணி 2 ஆவது இடத்திலும், 11 புள்ளிகளுடன் லக்னோ 3 ஆவது இடத்திலும் உள்ளன. 10 புள்ளிகளை ராஜஸ்தான், கொல்கத்தா, பெங்களுரு, பஞ்சாப் மற்றும் மும்பை என 5 அணிகள் பெற்றுள்ள போதிலும், இவற்றில் மும்பை மற்றும் பெங்களூருவை தவிர்த்து மற்ற அணிகள் 11 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன.

top videos

    மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் இன்று தங்களது 11 ஆவது போட்டியில் விளையாடுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி 2 புள்ளிகள் பெற்று 12 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திற்கு முன்னேறும். அதன் அடிப்படையில் லக்னோ 4 ஆவது இடத்திற்கும், தற்போது 4 ஆம் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணி 5 ஆவது இடத்திற்கும் செல்லும். இன்னும் ஒவ்வொரு அணியும் தலா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடவுள்ளதால் அனைத்து ஆட்டங்களும் மிகவும் விறுவிறுப்பாக அமையப் போகின்றன. இன்றைய ஆட்டம் மும்பையில் நடைபெறவுள்ளதால் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் மும்பை அணி வெற்றி பெற முனைப்பு காட்டும். சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி மோசமான தோல்வியை அடைந்த நிலையில், அடுத்து நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. கடந்த சனியன்று நடந்த போட்டியில் டெல்லியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: IPL, IPL 2023