முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : ஐதராபாத்திற்கு எதிரான மேட்ச்சில் மும்பை வெற்றி பெற 201 ரன்கள் இலக்கு…

IPL 2023 : ஐதராபாத்திற்கு எதிரான மேட்ச்சில் மும்பை வெற்றி பெற 201 ரன்கள் இலக்கு…

ஐதராபாத் அணியின் மயங்க் அகர்வால் - விவ்ராந்த் சர்மா

ஐதராபாத் அணியின் மயங்க் அகர்வால் - விவ்ராந்த் சர்மா

16 ஓவரில் ஐதராபாத் அணி 168 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கடைசி 4 ஓவரை சிறப்பாக வீசிய மும்பை பவுலர்கள் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெறுவதற்கு 201 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய மும்பை அணி இந்த போட்டியில் கட்டாயம்  வெற்றி பெற வேண்டும். இதனால் இந்த ஆட்டம் வழக்கத்தை விட கூடுதல் பரபரப்பாக காணப்படுகிறது. 16 ஓவரில் ஐதராபாத் அணி 168 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கடைசி 4 ஓவரை சிறப்பாக வீசிய மும்பை பவுலர்கள் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர். மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார்.

ஐதராபாத் அணி கடந்த சில போட்டிகளில் மோசமான தொடக்கத்தை கொடுத்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் பேட்டிங்கில் மாற்றம் செய்யப்பட்டது. அறிமுக வீரராக விவ்ரந்த் சர்மா ஒபனிங் பேட்ஸ்மேனாக களம் இறக்கப்பட்டார். அவரும் மயங்க் அகர்வாலும் இணைந்து பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். ஓவருக்கு சராசரியாக 10 ரன்கள் என்ற வேகத்தில் இருவரும் ரன்குவிப்பில் ஈடுபட்டனர். அணி 13.5 ஓவரில் 140 ரன்கள் எடுத்திருந்தபோது விவ்ரந்த் சர்மா 69 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயங்க் அகர்வால் 83 ரன்களை 46 பந்துகளில் குவித்தார். இதில் 8 பவுண்டரியும் 4 சிக்சர்களும் அடங்கும்.

IPL 2023 : அறிமுக போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்… ஐதராபாத்தின் விவ்ரந்த் சர்மா சாதனை

இரவரும் வலுவான தொடக்கத்தை அளித்தபோதிலும் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சரியாக பயன்படுத்தாததால் ரன் குவிப்பு வேகம் பாதிக்கப்பட்டது. ஹென்றிக் கிளாசன் 18, கிளென் பிலிப்ஸ் 1, கேப்டன் மார்க்ரம் 13, ஹென்றி ப்ரூக் 0, சன்விர் சிங் 4 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 200 ரன்களை எடுத்தது. மும்பை அணியில் சிறப்பாக பந்துவீசிய ஆகாஷ் மத்வால் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடத் தொடங்கியுள்ளனர்.

First published:

Tags: IPL, IPL 2023