முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : ஆர்.சி.பி.க்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற 200 ரன்கள் இலக்கு

IPL 2023 : ஆர்.சி.பி.க்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற 200 ரன்கள் இலக்கு

மும்பை இந்தியன்ஸ் அணி

மும்பை இந்தியன்ஸ் அணி

மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பெரன்டாஃப் சிறப்பாக பந்து வீசி விராட் கோலி, மேக்ஸ்வெல், அனுஜ் ராவத் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற 200 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் கேப்டன் ஃபாஃப் டூப்ளசிஸ் களத்தில் இறங்கினர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி ஒரேயொரு ரன் மட்டும் எடுத்து பெரண்டாஃப் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களத்திற்கு வந்த அனுஜ் ராவத் 6 ரன்னில் வெளியேற பின்னர் இணைந்த கேப்டன் டூப்ளசிஸ் – மேக்ஸ்வெல் இணை அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 4 சிக்சர் மற்றும் 8 பவுண்டரியுடன் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். டூப்ளசிஸ் 41 பந்துகளில் 3 சிக்சர் 5 பவுண்டரியுடன் 65 ரன்கள் எடுத்தார். இருவரின் விக்கெட்டுகளை இழந்த பின்னர் பெங்களூரு அணியின் ரன் குவிப்பு வேகம் கணிசமாக குறைந்தது.

பின்னர் வந்த லோம்ரோர் 1 ரன்னும், தினேஷ் கார்த்திக் 18 பந்துகளில் 30 ரன்னும், கேதர் ஜாதவ் மற்றும் வனிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 12 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி 199 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணியின் வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பெரன்டாஃப் சிறப்பாக பந்து வீசி விராட் கோலி, மேக்ஸ்வெல், அனுஜ் ராவத் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

First published:

Tags: IPL, IPL 2023