முகப்பு /செய்தி /விளையாட்டு / ரோஹித் சர்மாவின் நம்பிக்கையை காப்பாற்றிய ஆர்.சி.பி… ப்ளே ஆஃப் செல்ல மும்பை இந்தியன்ஸிற்கு உதவி

ரோஹித் சர்மாவின் நம்பிக்கையை காப்பாற்றிய ஆர்.சி.பி… ப்ளே ஆஃப் செல்ல மும்பை இந்தியன்ஸிற்கு உதவி

விராட் கோலி - ரோஹித் சர்மா (ஃபைல் ஃபோட்டோ)

விராட் கோலி - ரோஹித் சர்மா (ஃபைல் ஃபோட்டோ)

கடந்த ஆண்டு பெங்களூரு அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல நாங்கள் உதவினோம். இந்த முறை அவர்கள் எங்களுக்கு உதவி செய்வார்கள் என்று நம்புகிறோம் – ரோஹித் சர்மா

  • Last Updated :
  • Tamil Nadu, India

ப்ளே ஆஃப் செல்ல ஆர்.சி.பி அணி உதவி செய்யும் என்று மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், அதனை ஆர்சிபி அணி காப்பாற்றியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றிருந்தன. இந்நிலையில் 4 ஆவதாக இடம்பெறப் போகும் அணிக்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே போட்டி காணப்பட்டது.

இதனை முடிவு செய்யும் போட்டிகள் நேற்று நடத்தப்பட்டன. முதலில் நடைபெற்ற  போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வென்று மும்பை இந்தியன்ஸ் அணி 16 புள்ளிகளைப் பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி அடுத்து நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடும். இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக ப்ளே ஆஃப் குறித்து கருத்து கூறிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, கடந்த ஆண்டு பெங்களூரு அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல நாங்கள் உதவினோம். இந்த முறை அவர்கள் எங்களுக்கு உதவி செய்வார்கள் என்று நம்புகிறோம் என கிண்டலாக கூறியிருந்தார்.

அவரது நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் பெங்களூரு அணி குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறியது. இந்நிலையில் ரோஹித் சர்மா நேற்று அளித்த ப்ளே ஆஃப் தொடர்பான பேட்டி இன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கடந்த ஐபிஎல் தொடரின்போது, 69 ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பெங்களூரு அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: IPL, IPL 2023