முகப்பு /செய்தி /விளையாட்டு / பவுலர்கள் மீது ரோஹித் சர்மா கடும் அதிருப்தி… பஞ்சாப் அணியுடனான தோல்வி குறித்து விளக்கம்

பவுலர்கள் மீது ரோஹித் சர்மா கடும் அதிருப்தி… பஞ்சாப் அணியுடனான தோல்வி குறித்து விளக்கம்

ரோஹித் சர்மா - அர்ஜுன் டெண்டுல்கர்

ரோஹித் சர்மா - அர்ஜுன் டெண்டுல்கர்

பந்துவீச்சில் நாங்கள் தவறுகள் செய்தாலும் சூர்ய குமார் யாதவ் மற்றும் கேமரூன் கிரீனின் ஆட்டம் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது – ரோஹித்

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணயிடம் மும்பை இந்தியன்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடைசி ஓவர்களில் மும்பை அணியின் பவுலர்கள் ரன்கைள வாரி வழங்கிய நிலையில், பவுலர்கள் குறித்து கேப்டன் ரோஹித் சர்மா அதிருப்தியை வெளியிட்டுள்ளார். நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணயின் அர்ஜுன் டெண்டுல்கருடைய ஒரே ஓவரில் 31 ரன்களை பஞ்சாப் அணியினர் எடுத்தது குறிப்பிடத்தக்கது. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 214 ரன்களை எடுத்தது. 14 ஓவர்கள் வரை 4 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் மட்டுமே அந் அணி எடுத்திருந்த நிலையில் கடைசி 6 ஓவர்களில் 109 ரன்களை அதிரடியாக குவித்தனர்.

215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 201 ரன்கள் மட்டுமே எடுத்தனர். 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த மும்பை அணி பாயின்ட்ஸ் டேபிளில் 6 ஆவது இடத்திற்கு சென்றுள்ளது. பஞ்சாப் அணி 7 போட்டிகளில் விளையாடிய 4 வெற்றிகளுடன் 5 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- எங்களது பந்துவீச்சு அதிருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. இந்த தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடிய 3 வெற்றி மற்றும் 3 தோல்விகளை பெற்றுள்ளோம். தோல்வி பற்றி கவலைப் பட்டு எதுவும் நடக்கப் போவதில்லை.

top videos

    இன்னும் எங்களுக்கு 8 போட்டிகள் உள்ளன. பந்துவீச்சில் நாங்கள் தவறுகள் செய்தாலும் சூர்ய குமார் யாதவ் மற்றும் கேமரூன் கிரீனின் ஆட்டம் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அவர்கள் பேட்டிங் செய்த விதம் எங்களை ஆட்டத்தின் கடைசி பந்து வரைக்கும் கொண்டு சென்றது. கடைசி நேரத்தில் அற்புதமாக 2 ஓவர்களை வீசிய அர்ஷ்தீப் சிங்கிற்கு பாராட்டுக்கள். என்று கூறியுள்ளார். இந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அரைச்சதம் அடித்ததுடன் அணியை சிறப்பாக வழிநடத்தி வெற்றி பெற வைத்த பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

    First published:

    Tags: IPL, IPL 2023