முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘மும்பை அணியில் பொலார்டு இடத்தை டிம் டேவிட் நிரப்புவார்’ – ரோஹித் சர்மா புகழாரம்

‘மும்பை அணியில் பொலார்டு இடத்தை டிம் டேவிட் நிரப்புவார்’ – ரோஹித் சர்மா புகழாரம்

கீரோன் பொலார்டு - டிம் டேவிட்

கீரோன் பொலார்டு - டிம் டேவிட்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரின் முதல் 3 பந்துகளை சிக்சராக மாற்றினார் டிம் டேவிட்

  • Last Updated :
  • Tamil Nadu, India

மும்பை அணியில் இருந்து கிரோன் பொலார்டு ஓய்வு பெற்றுள்ள நிலையில் அவரது இடத்தை அதிரடி பேட்ஸ்மேன் டிம் டேவிட் நிரப்புவார் என்று கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக மும்பை வான்கிடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில்  6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 62 பந்துகளில் 124 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடினர். சேஸிங்கின்போது மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 3 ரன்கள் எடுதது ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிஷன் 28 ரன் எடுத்து வெளியேறினார். கேமரூன் கிரீன் 26 பந்தில் 44 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 55 ரன்களையும் அதிரடியாக சேர்தததால் ஆட்டம் விறுவிறுப்பு அடைந்தது. கடைசி ஓவரில் மும்பை அணி வெற்றி  பெற 17 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை ராஜஸ்தான் அணியின் ஹோல்டர் வீசினார். இந்த ஓவரின் முதல் 3 பந்துகளை சிக்சருக்கு அனுப்பி மும்பை இந்தியன்ஸின் டிம் டேவிட் அணியை வெற்றி பெற வைத்தார். 19.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி வெற்றி இலக்கை எட்டியது. இந்த போட்டியில் வெறும் 14 பந்துகளில் டிம் டேவிட் 45 ரன்கள் விளாசினார். வெற்றிக்கு பின்னர் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

top videos

    மிகப்பெரிய ஸ்கோரை சேஸ் செய்து அதில் வெற்றி பெறுவதை மிகவும் மகிழ்ச்சிகரமாக உணர்கிறோம். கடந்த போட்டியில் நாங்கள் வெற்றிக்கு மிக அருகாமையில் வந்து தோல்வியடைந்தோம். மும்பை அணியில் இருந்து விடைபெற்ற பொலார்டின் வெற்றிடம் நிரப்ப முடியாமல் இருந்தது. அதை டிம் டேவிட் நிரப்புவார் என்று நம்புகிறேன். அதற்கான திறமை டேவிட்டிடம் அதிகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    First published:

    Tags: IPL, IPL 2023