முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : ஐதராபாத்திற்கு எதிரான மேட்ச்சில் மும்பை அணி அதிரடி வெற்றி… ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லுமா?

IPL 2023 : ஐதராபாத்திற்கு எதிரான மேட்ச்சில் மும்பை அணி அதிரடி வெற்றி… ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லுமா?

கேமரூன் கிரீன்

கேமரூன் கிரீன்

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 16 புள்ளிகளைப் பெற்று பாயின்ட்ஸ் டேபிளில் தற்போது 4 ஆவது இடத்திற்கு மும்பை அணி முன்னேறியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி விக்கெட்டுகள் 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் கேமரூன் கிரீன் 47 பந்துகளில் சதம் அடித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதன் மூலம் 14 போட்டிகளில் விளையாடி முடித்துள்ள மும்பை அணி 8 வெற்றியுடன் 16 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இன்னும் குஜராத் மற்றும் பெங்களரு அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவு வெளியாகாத நிலையில், ப்ளே ஆஃப் சுற்றுக்குள் மும்பை அணி செல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். ஐதராபாத் அணி கடந்த சில போட்டிகளில் மோசமான தொடக்கத்தை கொடுத்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் பேட்டிங்கில் மாற்றம் செய்யப்பட்டது. அறிமுக வீரராக விவ்ரந்த் சர்மா ஒபனிங் பேட்ஸ்மேனாக களம் இறக்கப்பட்டார். அவரும் மயங்க் அகர்வாலும் இணைந்து பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். ஓவருக்கு சராசரியாக 10 ரன்கள் என்ற வேகத்தில் இருவரும் ரன்குவிப்பில் ஈடுபட்டனர். அணி 13.5 ஓவரில் 140 ரன்கள் எடுத்திருந்தபோது விவ்ரந்த் சர்மா 69 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயங்க் அகர்வால் 83 ரன்களை 46 பந்துகளில் குவித்தார். இதில் 8 பவுண்டரியும் 4 சிக்சர்களும் அடங்கும்.

top videos

    இருவரும் வலுவான தொடக்கத்தை அளித்தபோதிலும் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சரியாக பயன்படுத்தாததால் ரன் குவிப்பு வேகம் பாதிக்கப்பட்டது. ஹென்றிக் கிளாசன் 18, கிளென் பிலிப்ஸ் 1, கேப்டன் மார்க்ரம் 13, ஹென்றி ப்ரூக் 0, சன்விர் சிங் 4 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 200 ரன்களை எடுத்தது. மும்பை அணியில் சிறப்பாக பந்துவீசிய ஆகாஷ் மத்வால் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடத் தொடங்கினர். தொடக்க வீரர் இஷான் கிஷன் 12 பந்துகளில் 14 ரன்கள் எடுக்க கேப்டன் ரோஹித் சர்மா பொறுப்புடன் விளையாடி 37 பந்துகளில் 1 சிக்சர் மற்றும் 8 பவுண்டரியுடன் 56 ரன்கள் எடுத்தார். கடந்த போட்டியில் மும்பை அணியின் தோல்விக்கு காரணம் என்று விமர்சிக்கப்பட்ட கேமரூன் கிரீன் இன்றைய ஆட்டத்தில் மும்பையின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். 47 பந்துகளை எதிர்கொண்ட அவர் தலா 8 சிக்சர் மற்றும் பவுண்டரிகளுடன் 100 ரன்கள் எடுத்தார். 18 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அடுத்து நடைபெறவுள்ள பெங்களூரு – குஜராத் ஆட்டத்தில் குஜராத் வெற்றி பெற்றாலோ அல்லது மழை காரணமாக தலா 1 புள்ளிகள் இரு அணிகளுக்கு அளிக்கப்பட்டாலோ மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றுவிடும்.

    First published:

    Tags: IPL, IPL 2023