முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 ; ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..

IPL 2023 ; ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..

டிம் டேவிட்

டிம் டேவிட்

கடைசி ஓவரில் மும்பை அணி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை ராஜஸ்தான் அணியின் ஹோல்டர் வீசினார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக மும்பை வான்கிடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில்  6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 62 பந்துகளில் 124 ரன்கள் எடுத்தார். இதில் 8 சிக்சர்களும் 16 பவுண்டரிகளும் அடங்கும். ஜோஸ் பட்லர் 18 ரன்களும் கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்னில் வெளியேற 7 விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் அணி 212 ரன்கள் எடுத்தது. “

இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடினர். சேஸிங்கின்போது மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 3 ரன்கள் எடுதது ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிஷன் 28 ரன் எடுத்து வெளியேறினார். கேமரூன் கிரீன் 26 பந்தில் 44 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 55 ரன்களையும் அதிரடியாக சேர்தததால் ஆட்டம் விறுவிறுப்பு அடைந்தது. கடைசி ஓவரில் மும்பை அணி வெற்றி  பெற 17 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை ராஜஸ்தான் அணியின் ஹோல்டர் வீசினார். இந்த ஓவரின் முதல் 3 பந்துகளை சிக்சருக்கு அனுப்பி மும்பை இந்தியன்ஸின் டிம் டேவிட் அணியை வெற்றி பெற வைத்தார். 19.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி வெற்றி இலக்கை எட்டியது.

First published:

Tags: IPL, IPL 2023