முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : கொல்கத்தா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மும்பை இந்தியன்ஸ்

IPL 2023 : கொல்கத்தா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மும்பை இந்தியன்ஸ்

இஷான் கிஷன்

இஷான் கிஷன்

கடந்த சில போட்டிகளாக தடுமாறிய சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியில் 3 சிக்சர் 4 பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்தார்

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் என். ஜெகதீசன் ஆகியோர் களத்தில் இறங்கினர். ஜெகதீசன் ரன் ஏதும் எடுக்காமல் க்ரீன் பந்துவீச்சில் ஹிருத்திக் ஷோகீனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். குர்பாஸ் 8 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் நிதிஷ் ராணா 5 ரன்னில் விக்கெட்டை பறி கொடுத்தார். விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் பேட்ஸ்மேன் வெங்கடேஷ் ஐயர் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுக்க மற்ற பேட்ஸ்மேன்கள் தவறியதால் ரன் குவிப்பு கட்டுப்படுத்தப்பட்டது.

அதிரடி ஆட்டத்தால் சதம் அடித்த வெங்கடேஷ் ஐயர் 51 பந்துகளில் 104 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 9 சிக்சரும் 6 பவுண்டரியும் அடங்கும். ஷர்துல் தாகூர் 13 ரன்களும், ரிங்கு சிங் 18 ரன்களும் சேர்க்க கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ஆண்ட்ரே ரஸல் 21 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 185 ரன்களை எடுத்தது. இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணி வீரர்கள் களத்தில் இறங்கினர். இஷான் கிஷன் அதிரயாக விளையாட அவருக்கு சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுத்த ரோஹித் சர்மா 20 ரன்கள் எடுத்து முதல் விக்கெட்டிற்கு 65 ரன்களை பார்ட்னர்ஷிப் ஏற்படுத்தினார்.

top videos

    கடந்த சில போட்டிகளாக தடுமாறிய சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியில் 3 சிக்சர் 4 பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்தார். 5 சிக்சர் மற்றும் பவுண்டரியுடன் இஷான் கிஷன் 58 ரன்களை விரைவாக எடுத்தார். திலக் வர்மா 30, டிம் டேவிட் 24 ரன்கள் எடுக்க 17.4 ஓவரில் 5விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டியது.

    First published:

    Tags: IPL, IPL 2023