ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பெங்களூரு அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸின் சாதனையை முறியடித்துள்ளார். கடந்த சில போட்டிகளாக அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், ரோஹித்தின் சாதனை ரசிர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் குஜராத் அணிக்கு எதிராக மும்பை வான்கிடேவில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் ரோஹித் சர்மா 18 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்த 29 ரன்களில் 2 சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா ஒட்டுமொத்தமாக 252 சிக்சர்களை அடித்துள்ளார். இதன் மூலம் 251 சிக்சர்களை அடித்த பெங்களூரு அணி வீரர் டிவில்லியர்ஸின் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற சாதனையை தனது 357 சிக்சர்கள் மூலம் கிறிஸ் கெய்ல் ஏற்படுத்தியுள்ளார். கெய்லின் ரிக்கார்டை அவ்வளவு எளிதில் யாரும் முறியடித்து விட முடியாது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறியுள்ளார்கள்.
நடப்பு ஐபிஎல் சீசனில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் சுமாராகவே இருந்துள்ளது. 12 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒட்டுமொத்தமாக 220 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். சராசரி 18.33 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 128.65 ஆக உள்ளது. இந்த சீசனில் ரோஹித்தின் அதிகபட்ச ஸ்கோர் 65 ரன்களாக உள்ளது. இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாயின்ட்ஸ் டேபிளில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தின்போது 219 ரன்களை மும்பை அணி வெற்றிகரமாக சேஸ் செய்தது. அந்த அணியின் சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் அதிரடியாக விளையாடி 103 ரன்கள் எடுத்தார். இவற்றில் 6 சிக்சர்களும் 11 பவுண்டரிகளும் அடங்கும். ஐபிஎல் பாயின்ட்ஸ் டேபிளில் 12 போட்டிகளில் விளையாடி 7 இல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் மும்பை அணி 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.