முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி 5 ஆயிரம் ரன்கள் குவித்த ரோஹித் சர்மா…

IPL 2023 : மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி 5 ஆயிரம் ரன்கள் குவித்த ரோஹித் சர்மா…

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

முக்கிய ஆட்டக்காரர்கள் நல்ல ஃபார்மில் இருப்பதால் மும்பை அணியின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி ரோஹித் சர்மா 5 ஆயிரம் ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியின்போது அவர் 5 ஆயிரம் ரன்களை கடந்தார். இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றிருப்பதால் கூடுதல் உற்சாகத்துடன் காணப்படுகிறார் ரோஹித் சர்மா. ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று மும்பை இந்தியன்ஸ் அணி சாதனை படைத்துள்ளது.

இதற்கு அடுத்த இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறை சாம்பியன் பட்டம்  வென்றுள்ளது. மும்பை அணியின் வெற்றியின் பின்னணியில் ரோஹித் சர்மா முக்கிய காரணமாக இருந்து வருகிறார். நடப்பு சீசனில் தொடக்கத்தில் தடுமாறிய மும்பை அணி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. பின்னர் சுதாரித்து விளையாடிய மும்பை அணி, 14 போட்டிகளில் 8 மேட்ச்சில் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. புதன் அன்று நடைபெறவுள்ள எலிமினேட்டர் சுற்றில் மும்பை மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இதையும் படிங்க - ரோஹித் சர்மாவின் நம்பிக்கையை காப்பாற்றிய ஆர்.சி.பி… ப்ளே ஆஃப் செல்ல மும்பை இந்தியன்ஸிற்கு உதவி

top videos

    இந்த நிலையில், நேற்று ஐதராபாத் அணிக்கு எதராக நடந்த மேட்ச்சில் 37 பந்துகளில் ரோஹித் சர்மா 56 ரன்கள் எடுத்தார். பவுலிங்கில் மும்பை அணி தொடர்ந்து தடுமாறி வரும் நிலையில், அதனை ஈடு செய்ய பேட்டிங்கில் முக்கிய ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக கேமரூன் கிரீனின் பேட்டிங் வியக்கும் வகையில் உள்ளது. நேற்றைய ஆட்டத்தில் 47 பந்துகளில் 8 சிக்சர் மற்றும் 8 பவுண்டரியுடன் சதம் அடித்தார். முக்கிய ஆட்டக்காரர்கள் நல்ல ஃபார்மில் இருப்பதால் மும்பை அணியின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதற்கிடையே நாளை நடைபெறவுள்ள குவாலிபையர் சுற்றில் சென்னை அணி குஜராத் டைட்டன்சுடன் மோதுகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இரவு 7.30-க்கு தொடங்குகிறது.

    First published:

    Tags: IPL, IPL 2023