ஐபிஎல் தொடரில் ஓய்வு பெறுவது தொடர்பாக வர்ணனையாளர் கேட்ட கேள்விக்கு தோனி அளித்துள்ள பதிலால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தோனியின் பதில் அவர் அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாடுவார் என்ற நம்பிக்கையை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி லக்னோ மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பாக மழைத்தூறல் விழுந்து கொண்டே இருந்ததால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது. 3 மணிக்கு போடப்பட வேண்டிய டாஸ், மழை காரணமாக 3.30 க்கு போடப்பட்டது. இதில் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார். காயம் காரணமாக கே.எல். ராகுலுக்கு பதிலாக லக்னோ அணியை க்ருணல் பாண்ட்யா வழி நடத்துகிறார்
டாஸ் நிகழ்வின்போது நடுவரும் வர்ணனையாளருமான டேனி மோரிசன் தோனியிடம், ‘இந்த மைதானத்தில் நீங்கள் விளையாடப் போகும் கடைசி மேட்ச் இது. இதனை எப்படி உணர்கிறீர்கள்?’ என்று கேட்டார். இதற்கு சிரித்துக் கொண்டே பதில் அளித்த தோனி, ‘நீங்களே இதுதான் இங்கு எனக்கு கடைசி மேட்ச் என்று முடிவு செய்துவிட்டீர்கள்’ என்றார். தொடர்ந்து பேசிய டேனி மோரிசன் ரசிர்களை பார்த்தவாறு, ‘அவர் அடுத்த ஆண்டு மீண்டும் இதே மைதானத்தில் விளையாட வருவார்’ என்று கூறினார்.
MSD keeps everyone guessing 😉
The Lucknow crowd roars to @msdhoni's answer 🙌🏻#TATAIPL | #LSGvCSK | @msdhoni pic.twitter.com/rkdVq1H6QK
— IndianPremierLeague (@IPL) May 3, 2023
Magizchi 🫰🤩#LSGvCSK #WhistlePodu #Yellove 🦁💛pic.twitter.com/EEvCHOhPP5
— Chennai Super Kings (@ChennaiIPL) May 3, 2023
மோரிசனின் பேச்சை தோனி சிரித்தவாறு ரசித்துக் கொண்டிருந்தார். தோனி இந்த ஐபிஎல் சீசனுடன் ஓய்வு பெறுவார் என்று தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அதுகுறித்த உறுதியான எந்த தகவலையும் தோனி வெளியிடாமல் இருக்கிறார். சமீபத்தில் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், ஓய்வு பெறுவது குறித்து தோனி எந்தவொரு அறிகுறியையும் தன்னிடத்தில் தெரியப்படுத்தவில்லை என்று கூறியிருந்தார். ஓய்வு குறித்த கேள்விக்கு தோனியின் இன்றைய பதில் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.