முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த 10 பேட்ஸ்மேன்கள்… ஆரஞ்ச் கேப் வெல்லப்போவது யார்?

IPL 2023 : ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த 10 பேட்ஸ்மேன்கள்… ஆரஞ்ச் கேப் வெல்லப்போவது யார்?

ஐ.பி.எல். கோப்பை

ஐ.பி.எல். கோப்பை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டூப்ளசிஸ் 14 போட்டிகளில் விளையாடி 730 ரன்களை குவித்துள்ளார்

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து தற்போது ப்ளே ஆஃப் சுற்று தொடங்கியுள்ளது. இந்த தொடரிலும் பவுலர்களை விடவும் பேட்ஸ்மேன்களே அதிக போட்டிகளை தங்களது அணிக்கு வெற்றி பெற்று கொடுத்துள்ளனர். அந்த வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டூப்ளசிஸ் 14 போட்டிகளில் விளையாடி 730 ரன்களை குவித்துள்ளார். சராசரி 56.15 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 153.68. 2 ஆவது இடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சுப்மன் கில் உள்ளார். லீக் தொடரில் 680 ரன்கள் குவித்துள்ள சுப்மன் கில்லின் சராசரி 56.17 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 152.47.

தற்போது அதிக ரன்களை குவித்து ஆரஞ்ச் கேப்பை டூப்ளசிஸ் தன் வசம்  வைத்துள்ளார். அதே நேரம், சுப்மன் கில்லிற்கு இன்றும் 2 ஆட்டங்கள் மீதம் இருப்பதால் டூப்ளசிஸின் சாதனையை கில் முறியடித்து ஆரஞ்ச் தொப்பியை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இருவரை தவிர்த்து அதிக ரன்களை குவித்த வீரர்கள் பின்வருமாறு-

பெங்களூரு அணியின் விராட் கோலி – 639 ரன்கள்.

ராஜஸ்தான் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் – 625 ரன்கள்

சென்னை அணியின் டெவோன் கான்வே – 585 ரன்கள்

இதையும் படிங்க - உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர்… 10 அணிகள் மோதும் தகுதிச் சுற்று அடுத்த மாதம் தொடக்கம்

டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் – 516 ரன்கள்

மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் – 511 ரன்கள்

சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் – 504 ரன்கள்

கொல்கத்தாவின் ரின்கு சிங் – 474 ரன்கள்

ஐதராபாத் அணியின் ஹென்ரிக் கிளாசன் – 448 ரன்கள்

First published:

Tags: IPL, IPL 2023