ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனையை ராஜஸ்தான் அணியின் ஜாஸ் பட்லர் ஏற்படுத்தியுள்ளார். நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது இந்த ரிக்கார்டை ஏற்படுத்தினார் பட்லர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. ஒவ்வொரு அணியும் குறைந்தது 13 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் தற்போது வரை பஞ்சாப், டெல்லி மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் தொடரிலிருந்து வெளியேறியுள்ளன. நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 19.4 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கின்போது தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் 4 பந்துகளை எதிர்கொண்டு ரபடாவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த தொடரில் பட்லர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனது 5 ஆவது முறையாகும். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒரே சீசனில் அதிகமுறை டக் அவுட் ஆனவர் என்ற ரிக்கார்டை பட்லர் ஏற்படுத்தியுள்ளார்.
முன்னதாக 2009-இல் டெக்கர் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய ஹெர்ஷெல் கிப்ஸ், 2011 இல் புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடிய மிதுன் மன்ஹாஸ், 2012-இல் புனே அணியின் மணிஷ் பாண்டே, 2020-இல் டெல்லி அணியின் ஷிகர் தவான், 2021-இல் கொல்கத்தா அணியின் யோன் மோர்கன், ஐதராபாத் அணியின் நிகோலஸ் பூரன் ஆகியோர் தலா 4 முறை ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இவர்களை பின்னுக்கு தள்ளி பட்லர் 5 முறை டக் அவுட் ஆனவர் என்ற ரிக்கார்டை ஏற்படுத்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.