முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : ‘டெஸ்ட் போட்டிகளில் விளையாடக் கூடாது…’ – பதிரனாவுக்கு தோனி அட்வைஸ்

IPL 2023 : ‘டெஸ்ட் போட்டிகளில் விளையாடக் கூடாது…’ – பதிரனாவுக்கு தோனி அட்வைஸ்

தோனி - பதிரனா

தோனி - பதிரனா

மிக துல்லியமாக விளையாடும் பேட்ஸ்மேன்களை தவிர்த்து மற்றவர்கள் பதிரனா பந்துவீச்சில் தடுமாறுகின்றனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா டெஸ்ட் போட்டிகளில் விளையாடக் கூடாது என்றும் அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் முழு கவனம் செலுத்த வேண்டும் எனவும் சென்னை அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார். இலங்கையை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரனா ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். இவரது பந்துவீச்சில் ரன்கள் குவிப்பதற்கு முக்கிய பேட்ஸ்மேன்கள் பலரும் திணறி வருவதை பார்க்க முடிகிறது.

மும்பை அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் பதிரனா 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது. இதன்பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியின் போது சென்னை அணியின் கேப்டன் தோனி கூறியதாவது- மிக துல்லியமாக விளையாடும் பேட்ஸ்மேன்களை தவிர்த்து மற்றவர்கள் பதிரனா பந்துவீச்சில் தடுமாறுகின்றனர். இதற்கு பதிரனா வேகமாக வீசுகிறார் என்று மட்டுமே சொல்ல முடியாது. அவரது தொடர்ச்சியான சிறந்த பந்துவீச்சே இதற்கு காரணம். அவர் டெஸ்ட் போட்டிகளை தவிர்த்து விட்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

top videos

    இலங்கை அணியின் மிகப்பெரும் சொத்தாக பதிரனா இருப்பார். கடந்த சீசனில் குறைந்த போட்டிகளில் அவர் விளையாடினார். இந்த தொடரில் அவர் மிக சிறப்பாக பந்துவீசுவதை பார்க்க முடிகிறது. இந்த ஆட்டம் எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. கடந்த சில போட்டிகளின் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக இல்லை. ஆனால் இன்றைக்கு நாங்கள் வெற்றி பெற்ற அணியில் இருப்பதை எண்ணி மகிர்ச்சி கொள்கிறோம். டாஸ் வென்றால் பேட்டிங்கை முதலில் தேர்வு செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால் மழையை கவனத்தில் கொண்டு பந்து வீச தீர்மானித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

    First published:

    Tags: IPL, IPL 2023