முகப்பு /செய்தி /விளையாட்டு / சென்னைக்கு எதிரான போட்டியில் த்ரில் வெற்றி பெற்றது குஜராத் அணி...

சென்னைக்கு எதிரான போட்டியில் த்ரில் வெற்றி பெற்றது குஜராத் அணி...

அதிரடியாக விளையாடிய சுப்மன் கில்

அதிரடியாக விளையாடிய சுப்மன் கில்

Gujarat Titans vs Chennai Super Kings | சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது

  • Last Updated :
  • Gujarat, India

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று அகமாதபாத் நரேந்திர மோடி மைதானத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் கோலகலமாக தொடங்கியது. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹார்திக் பாண்டிய முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி சென்னை அணி தொடக்க வீரர் கான்வே மற்றும் ருதுராஜ் களமிறங்கினர். முகமது ஷமி பந்தில் கான்வே 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து ருதுராஜூடன் கைகோர்த்த மொயின் அலி அதிரடியாக விளையாடி ரஷித் கான் பந்தில் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறி சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து ருதுராஜ் குஜராத் அணியின் பந்துவீச்சை நாலாப்புறமும் பறக்கவிட்டார். அதிரடியாக விளையாடிய ருத்துராஜ் 9 சிக்சர்கள் அடுத்தார். 17.1 வது ஓவரில் 52 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஜடேஜாவும் 1 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

கடைசி ஓவரில் சென்னை அணி கேப்டன் தோனி ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து ரசிகர்களை உற்சாகமூட்டினார். தோனி 7 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவித்தது.

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியில் சாஹா மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடிய சாஹா 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் 36 பந்துகளில் 3 சிக்சர்கள் 6 பவுண்டர்கள் என 63 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

இறுதியில் குஜராத் அணி  19.2 ஓவர்களில்  182 ரன்கள்  எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் தொடரில் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

First published:

Tags: CSK, Gujarat Titans, IPL 2023