ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முக்கிய வேகப்பந்து வீச்சாளருக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 31 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. முன்னெப்போதையும் விட நடப்பு சீசன் மீதான ரசிகர்களின் ஆர்வம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த முறை சென்னை அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்படும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் வேகப்பந்து விச்சாளர் மொஹிசின் கானுக்கு சமீபத்தில் காயம் ஏற்பட்டது. இதையொட்டி அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தற்போது அவர் குணம் அடைந்து வரும் நிலையில், முழுமையாக குணம் அடைய நீண்ட நாட்கள் ஆகும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. லக்னோ அணியின் முக்கிய ஆட்டக்காரராக மொஹ்சின் கான் கருதப்படுகிறார். கடந்த சீசனில் அவர் பங்கேற்று 14 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சிறந்த பந்து வீச்சு 4/16. முன்னதாக பெங்களூரு தேசிய அகாடமியில் மொஹ்சின் கான் தனது காயத்திற்காக சிகிச்சை மேற்கொண்டிருந்தார்.
தற்போது வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் அவரால் முழு திறனையும் வெளிப்படுத்த முடியவில்லை. இதற்கிடையே கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஏலத்தின்போது லக்னோ அணி இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனாட்கட்டை எடுத்தது. அவர் மொஹ்சின் கானுக்கு சிறந்த மாற்று வீரராக இருப்பார் என்று கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் லக்னோ அணி வீரர்கள் - கேஎல் ராகுல், ஆயுஷ் படோனி, கரண் சர்மா, மனன் வோஹ்ரா, குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டோனிஸ், கிருஷ்ணப்ப கவுதம், தீபக் ஹூடா, கைல் மேயர்ஸ், க்ருனால் பாண்டியா, அவேஷ் கான், மொஹ்சின் கான், மார்க் வூட், மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய், ஜெய்தேவ் பூரன், நிக்கோலஸ் பூரன் உனத்கட், யாஷ் தாக்கூர், ரொமாரியோ ஷெப்பர்ட், டேனியல் சாம்ஸ், அமித் மிஸ்ரா, பிரேரக் மன்கட், ஸ்வப்னில் சிங், நவீன் உல் ஹக், யுத்வீர் சரக்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.