முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி முதலில் பேட்டிங்

IPL 2023 : லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி முதலில் பேட்டிங்

சென்னை அணியின் கேப்டன் தோனி

சென்னை அணியின் கேப்டன் தோனி

சென்னை அணி தனது முதல் போட்டியில் குஜராத்திடம் தோல்வியடைந்த நிலையில், இன்று 2ஆவது ஆட்டத்தில் லக்னோவை எதிர்கொள்கிறது

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங்கை முதலில் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கவுள்ளனர். சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் குஜராத் அணியிடம் தோல்வியடைந்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் கடந்த போட்டியில் இருந்து எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னை அணியில் இன்று விளையாடும் வீரர்கள் - டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி(கேப்டன்), ஷிவம் துபே, மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ஆர்.எஸ். ஹங்கர்கேகர்.

top videos

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வீரர்கள் – கே.எல். ராகுல்(கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), கிருஷ்ணப்பா கவுதம், மார்க் வூட், ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், அவேஷ் கான்.

    First published:

    Tags: IPL, IPL 2023