முகப்பு /செய்தி /விளையாட்டு / பேட்டிங்கில் ருத்ரதாண்டவம்- பஞ்சாப்பை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய லக்னோ

பேட்டிங்கில் ருத்ரதாண்டவம்- பஞ்சாப்பை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய லக்னோ

லக்னோ வீரர்கள்

லக்னோ வீரர்கள்

பஞ்சாப் அணிக்கு எதிரானப் போட்டியில் லக்னோ அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐ.பி.எல் 2023 தொடரின் 38-வது போட்டியில் லக்னோவும் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, முதலில் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுலும், மேயர்ஸ்ஸும் களமிறங்கினர். ராகுல் 12 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதனையடுத்து பதோனி களமிறங்கினார். மேயர்ஸ், பதோனி ஜோடி அதிரடியாக ஆடியது. மேயர்ஸ் 24 பந்துகளில் 54 ரன்களும், பதோனி 24 பந்துகளில் 43 ரன்களும் குவித்தனர்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டாய்னிஸ் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்தார். 40 பந்துகளில் 72 ரன்களைக் குவித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பூராணும் அதிரடியாக ஆடிய 45 ரன்கள் குவித்தார். லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் குவித்தனர். அதனையடுத்து, களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங்கும், ஷிகர் தவனும் களமிறங்கினர்.

top videos

    தவன் 1 ரன்னிலும், பிரப்சிம்ரன் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அதர்வா டைய்டி அதிரடியாக ஆடி 66 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து ஷிகந்தர் ரசா 36 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களே எடுத்தனர். 20 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 201 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அதன்மூலம் 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

    First published:

    Tags: IPL 2023