ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் 4 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார். கடந்த சில மாதங்களாக மோசமான ஃபார்மில் இருந்து வந்த ராகுல் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அரைச் சதம் அடித்திருப்பது லக்னோ அணியின் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு சீசனில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று பாயின்ட்ஸ் டேபிளில் 2 ஆவது இடத்தில் உள்ளது.
லக்னோவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 56 பந்துகளை எதிர்கொண்ட ராகுல் 74 ரன்கள் எடுத்தார். மொத்தம் 114 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற கே.எல்.ராகுல், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளைத் தொடர்ந்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் ராகுல்.
இந்நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தின்போது பஞ்சாப் அணிக்கு எதிராக 74 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் 4044 ரன்களை கே.எல். ராகுல் எடுத்துள்ளார். சராசரி 47.02 ரன்க்ள. ஸ்ட்ரைக் ரேட் 135.16. ஐபிஎல் தொடரில் 4 சதம் மற்றும் 32 அரைச்சதங்களை கே.எல். ராகுல் அடித்துள்ளார். இதில் அதிகபட்ச ஸ்கோர் 132 ரன்கள். 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது பஞ்சாப் அணிக்காக விளையாடிய கே.எல். ராகுல் 670 ரன்களை 14 மேட்ச்சுகளில் எடுத்திருந்தார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி 6,838 ரன்களுடன் முதலிடத்திலும், ஷிகர் தவான் 6,477 ரன்களுடன் 2 ஆவது இடத்திலும், டேவிட் வார்னர் 6,109 ரன்களுடன் 3 ஆவது இடததிலும் உள்ளனர். தற்போது 4,044 ரன்களை எடுத்துள்ள கே.எல். ராகுல் 14 ஆவது இடத்தில் உள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.