முகப்பு /செய்தி /விளையாட்டு / ஐபிஎல் 2023 : இன்று 2 போட்டிகள்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான்..!

ஐபிஎல் 2023 : இன்று 2 போட்டிகள்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான்..!

ஐபிஎல் 2023

ஐபிஎல் 2023

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளது.

  • Last Updated :
  • Lucknow, India

ஐபிஎல்லில் லக்னோ - சென்னை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. பகல் 3.30 மணிக்கு நடக்கும் 45வது போட்டியில் லக்னோ-சென்னை அணிகள் மோதுகின்றன. லக்னோவில் உள்ள ஏகானா விளையாட்டு மைதானத்தில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது.

புள்ளிப்பட்டியலில் 3ஆம் இடத்தில் இருக்கும் லக்னோ அணிக்கும், 4ஆம் இடத்தில் உள்ள சென்னை அணிக்கும் இந்த போட்டி மிக முக்கியம் என்பதால், வெற்றிக்காக இரு அணிகளும் போராடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.கடந்த போட்டியில் 200 ரன்கள் அடித்தும் சென்னை அணி தோற்ற நிலையில், பந்துவீச்சில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:  “சேட்டை புடிச்ச பையன் சார் விராட்..!” கம்பீரை வம்புக்கு இழுத்த கோலி - என்ன தான் பிரச்னை?

இதேபோல் இன்று இரவு 7.30 மணிக்கு பஞ்சாபில் நடக்கும் 46வது லீக் போட்டியில் பஞ்சாப்-மும்பை அணிகள் மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 6வது இடத்திலும், மும்பை அணி7வது இடத்திலும் இருக்கின்றன. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற பஞ்சாப்-மும்பை அணிகள் போராடும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது

top videos
    First published:

    Tags: Cricket, CSK, IPL 2023, MS Dhoni, Mumbai Indians