முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : மைதான பணியாளர்களுக்கு ஓடிச் சென்று உதவி… ரசிகர்களின் உள்ளங்களை வென்றார் ஜான்டி ரோட்ஸ்

IPL 2023 : மைதான பணியாளர்களுக்கு ஓடிச் சென்று உதவி… ரசிகர்களின் உள்ளங்களை வென்றார் ஜான்டி ரோட்ஸ்

மைதான பணியாளர்களுக்கு உதவும் ஜான்டி ரோட்ஸ்

மைதான பணியாளர்களுக்கு உதவும் ஜான்டி ரோட்ஸ்

சென்னை அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது சென்னை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட்  தொடரில் சென்னை – லக்னோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று நடைபெற்றபோது மழை குறுக்கிட்டது. அப்போது மைதான பணியாளர்கள் பிட்ச்சை மூடுவதற்கு லக்னோ அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஜான்டி ரோட்ஸ் ஓடிச் சென்று உதவினார். இதுதொடர்பான வீடியோ ஒன்று லைக்ஸ்களை குவித்து வருகிறது. ஐபிஎல் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

மழை பெய்ய ஆரம்பித்ததும், பணியாளர்கள் பிட்ச்சை மூடுவதற்கான உறையை இழுத்து வர முயன்றனர். அப்போது அவர்களுக்கு உதவியாக களத்தில் குதித்த ஜான்டி ரோட்ஸ், வலுவான பிளாஸ்ட்டிக் கவரை இழுக்க முயற்சி செய்தார். இதைப் பார்த்த மைதான நிர்வாகிகள் அவரிடம் சென்று, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று ரோட்ஸிடம் இருந்து பிடியை வாங்கிக் கொண்டனர். இதனால் சற்று நேரம் மைதானத்தில் நடந்த ரோட்ஸ் மீண்டும், பணியாளர்களுடன் இணைந்து பிளாஸ்டிக் கவரை இழுக்க ஆரம்பித்தார். கடைசியில் பிளாஸ்ட் கவரால் பிட்ச் மூடப்பட்டது.

முன்னணி நட்சத்திரங்கள் மைதானத்தில் உள்ள நிலையில், ஜான்டி ரோட்ஸ் எதையும் யோசிக்காமல் மைதான பணியாளர்களுக்கு உதவ ஓடிச் சென்றுள்ளார். இதுதொடர்பான வீடியோ கவனம்பெற்று வருகிறது. இதற்கிடையே, சென்னை – லக்னோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது. இதில் சென்னை அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது சென்னை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

First published:

Tags: IPL, IPL 2023