முகப்பு /செய்தி /விளையாட்டு / 52 பந்துகளில் 119 ரன்கள்… மும்பையை மிரட்டிய பஞ்சாபின் லிவிங்ஸ்டோன் – ஜிதேஷ் சர்மா இணை

52 பந்துகளில் 119 ரன்கள்… மும்பையை மிரட்டிய பஞ்சாபின் லிவிங்ஸ்டோன் – ஜிதேஷ் சர்மா இணை

லியாம் லிவிங்ஸ்டோன் - ஜிதேஷ் சர்மா

லியாம் லிவிங்ஸ்டோன் - ஜிதேஷ் சர்மா

மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக பஞ்சாப் அணியின் ஜிதேஷ் சர்மா உருவாகி வருகிறார் என்று, சமீபத்தில் பாசிடிவான விமர்சனங்கள் எழுந்தன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்துள்ள பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த 214 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் ஜிதேஷ் சர்மா மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் இணை அற்புதமாக பேட்டிங் செய்து 52 பந்துகளில் 119 ரன்கள் விளாசியுள்ளது. குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி பந்து வீச்சாளராக இருக்கும் இங்கிலாந்து அணியின் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பவுலிங்கில் சிக்சர்கள் பறந்தன.

ஆர்ச்சர் வீசிய 4 ஓவரில் மட்டும் பஞ்சாப் அணி 56 ரன்களை எடுத்துள்ளது. 19 ஆவது ஓவரை ஆர்ச்சர் வீசியபோது அதில் முதல் 3 பந்துகளை சிக்சருக்கு அனுப்பினார் லியாம் லிவிங்ஸ்டன். இந்த ஓவரில் மட்டும் மொத்தம் 27 ரன்கள் எடுக்கப்பட்டன. குறிப்பிடும் வகையில் ஜோப்ரா ஆர்ச்சர் 145 கிலோ மீட்டர் வேகத்தில் சராசரியாக பந்துவீசினார். முன்னணி பவுலரான அவரின் பந்துவீச்சே பஞ்சாப் அணியின் முன்பு எடுபடாமல் போனது வர்ணனையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

நடப்பு சீசனில் பெரும்பாலான ஆட்டங்களில் ரன்களை குவித்துள்ள லியாம் லிவிங்ஸ்டோன் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கிறார். இன்றைய ஆட்டத்தில் 42 பந்துகளை எதிர்கொண்ட அவர் 82 ரன்கள் குவித்தார். இவற்றில் 4 சிக்சர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக பஞ்சாப் அணியின் ஜிதேஷ் சர்மா உருவாகி வருகிறார் என்று, சமீபத்தில் பாசிடிவான விமர்சனங்கள் எழுந்தன. அதனை உறுதி செய்யும் வகையில் ஜிதேஷின் ஆட்டம்இன்று அமைந்தது. 27 பந்துகளை எதிர்கொண்ட அவர் 49 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினார். 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும இழந்துள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி 214 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர்.

First published:

Tags: IPL, IPL 2023