முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘என்னால் அணியை வெற்றி பெற வைக்க முடியும் என்று நம்பிக்கை வைத்தேன்…’ – ரின்கு சிங் பேட்டி

‘என்னால் அணியை வெற்றி பெற வைக்க முடியும் என்று நம்பிக்கை வைத்தேன்…’ – ரின்கு சிங் பேட்டி

ஆண்ட்ரே ரசலுடன் ரின்கு சிங்

ஆண்ட்ரே ரசலுடன் ரின்கு சிங்

கொல்கத்தா அணிக்கு மிக முக்கியமான தருணத்தில் மிகவும் தேவைக்குரிய வெற்றியாக இது அமைந்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியுடனான வெற்றி குறித்து கொல்கத்தா  அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரின்கு சிங் பேட்டி அளித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 179 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணியில், கேப்டன் நிதிஷ் ராணா 51 ரன்களும், ஆண்ட்ரே ரஸல் 42 ரன்களும் எடுத்தனர்.

கடைசி பந்தில் 2 ரன் எடுக்க வேண்டிய நிலையில் அதை அட்டகாசமாக பவுண்டரிக்கு அனுப்பி ரின்கு சிங் வெற்றி பெற வைத்தார். கொல்கத்தா அணிக்கு மிக முக்கியமான தருணத்தில் மிகவும் தேவைக்குரிய வெற்றியாக இது அமைந்தது.

இந்த மேட்ச்சுக்கு பின்னர் ரின்கு சிங் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- ஆட்டத்தின் கடைசி பந்தாக அதனை நான் கருதவில்லை. முன்பு நான் 5 சிக்சர்கள் தொடர்ச்சியாக அடித்தபோதும், அதிக நெருக்கடியாக நான் உணரவில்லை. ஒவ்வொரு பந்தையும் கவனித்த அதற்கு ஏற்றவாறு நான் விளையாடுகிறேன். என்னால் அணியை வெற்றி பெற வைக்க முடியும் என்று நம்பினேன். அது நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

First published:

Tags: IPL, IPL 2023