முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 200 ரன்கள் குவித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

IPL 2023 : பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 200 ரன்கள் குவித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா அணியின் நிதிஷ் ராணா - வெங்கடேஷ் ஐயர்

கொல்கத்தா அணியின் நிதிஷ் ராணா - வெங்கடேஷ் ஐயர்

ஜெகதீசன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியைப் போன்று நிதானமாக விளையாட, ஜேசன் ராய் சிக்சரும் பவுண்டரியுமாக அடித்து தூள் பறத்தினார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 200 ரன்கள் குவித்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்றை பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் – ஜெகதீசன் களத்தில் இறங்கினர். ஜெகதீசன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியைப் போன்று நிதானமாக விளையாட, ஜேசன் ராய் சிக்சரும் பவுண்டரியுமாக அடித்து தூள் பறத்தினார்.

29 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 சிக்சர் மற்றும் 4 பவுண்டரியுடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜெகதீசன் 29 பந்தில் 27 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 31 ரன்களும் எடுத்தனர். அதிரடியாக ரன்களை சேர்த்த கேப்டன் நிதிஷ் ராணா 21 பந்தில் 4 சிக்சர் 3 பவுண்டரியுடன் 48 ரன்கள் எடுத்தார். ரஸல் 1 ரன்னும், ரின்கு சிங் 18 ரன்னும், டேவிட் வைஸ் 12 ரன்னும் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 200 ரன்களை குவித்தது.

இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர். பெங்களூரு அணி தரப்பில் ஹசரங்கா, விஜயகுமார் வைசாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சிராஜ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

First published:

Tags: IPL, IPL 2023