முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘இந்திய அணியில் இடம்பெறுவது குறித்து அதிகம் யோசிக்கவில்லை’ – ரின்கு சிங் பேட்டி

‘இந்திய அணியில் இடம்பெறுவது குறித்து அதிகம் யோசிக்கவில்லை’ – ரின்கு சிங் பேட்டி

ஆண்ட்ரே ரசலுடன் ரின்கு சிங்

ஆண்ட்ரே ரசலுடன் ரின்கு சிங்

நடப்பு சீசனில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள ரின்கு சிங் மொத்தம் 474 ரன்களை குவித்துள்ளார். சராசரி 59.25 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 149.52.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறுவது குறித்து தான் அதிகம் யோசிக்கவில்லை என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரின்கு சிங் கூறியுள்ளார். ஜிம்முக்கு செல்வது, கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்வது என இவற்றில்தான் முழு கவனம் செலுத்தப் போவதாகவும் ரின்கு சிங் தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசன் பல திறமை மிக்க வீரர்களை கிரிக்கெட் உலகில் அடையாளம் காட்டியுள்ளது. அந்த வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரின்கு சிங் முதன்மை ஆட்டக்காரராக பார்க்கப்படுகிறார்.

பாயின்ட்ஸ் டேபிளில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் குஜராத் டைட்டன்ஸிற்கு எதிரான போட்டியில், கொல்கத்தா அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்டது. இதில் கடைசி 5 பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பி ரின்கு சிங் அணியை வெற்றி பெற வைத்தார். இதன் பின்னர் நடைபெற்ற ஆட்டங்களிலும் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார் ரின்கு சிங். நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் ரின்கு சிங் 33 பந்துகளில் 4 சிக்சர் 6 பவுண்டரியுடன் 67 ரன்கள் சேர்த்தார். இந்த போட்டியில் கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதில் கொல்கத்தா வெற்றி பெற்றிருந்தால் லக்னோ அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்திருக்கும்.

இதையும் படிங்க - பெங்களூருவில் மழைக்கு வாய்ப்பு... ஆர்சிபியின் ப்ளேஆப் கனவு கலையுமா? ரசிகர்கள் சோகம்

இந்நிலையில் ரின்கு சிங் இந்திய அணியில் கட்டாயம் இடம்பிடிப்பார் என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கூறி வருகின்றனர். அதுகுறித்து ரின்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- இந்த ஐபிஎல் சீசன் எனக்கு மிகவும் முக்கியமான போட்டியாக அமைந்து விட்டது. இந்திய அணியில் இடம்பெறுவது குறித்து நான் யோசிக்கப் போவது இல்லை. இப்போது நான் எனது வீட்டிற்கு செல்கிறேன். அதன்பின்னர் எனது வழக்கமான கிரிக்கெட் பயிற்சி, ஜிம் ஆகியவற்றில்தான் கவனம் செலுத்துவேன். எனது வேலைகளில் நான் மிகவும் கவனமாக இருப்பேன். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் எனது ஆட்டம் குறித்து எனது குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். குஜராத் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 5 சிக்சர் அடித்தது எனக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை அளித்தது. இவ்வாறு அவர் கூறினார். நடப்பு சீசனில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள ரின்கு சிங் மொத்தம் 474 ரன்களை குவித்துள்ளார். சராசரி 59.25 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 149.52.

First published:

Tags: IPL, IPL 2023