முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : வருண் சக்கரவர்த்தி சுழல் சுருண்டது ஐதராபாத் அணி… 5 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் தோல்வி

IPL 2023 : வருண் சக்கரவர்த்தி சுழல் சுருண்டது ஐதராபாத் அணி… 5 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் தோல்வி

வெற்றிக்கு பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள்

வெற்றிக்கு பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள்

பொறுப்புடன் விளையாடிய எய்டன் மார்க்ரம் 40 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். இதுவே சன்ரைசர்ஸ் அணிக்கு கடைசி நேரத்தில் கடும் நெருக்கடி ஏற்பட காரணமாக அமைந்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருந்தன. கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற 9 ரன்கள் தேவைப்பட்டபோது அந்த ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி அசத்தலாக பந்து வீசி 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் குர்பாஸ் ஆகியோர் களத்தில் இறங்கினர். குர்பாஸ் ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க பின்னர் கேப்டன் நிதிஷ் ராணாவுடன் தொடக்க வீரர் ஜேசன் ராய் களத்தில் இறங்கினார். பொறுப்புடன் விளையாடி இருவரும் ரன்களை சேர்க்கத் தொடங்கினர். ஜேசன் ராய் 20 ரன்னில் ஆட்டமிழக்க 31 பந்துகளில் 42 ரன்கள் குவித்து கேப்டன் நிதிஷ் ராணா வெளியேறினார்.

கடந்த சில போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுததி ரின்கு சிங் இந்த போட்டியிலும் ரன்களை குவித்தார். 35 பந்துகளை எதிர்கொண்ட அவர் 1 சிக்சர் மற்றும் 4 பவுண்டரியுடன் 46 ரன்கள் எடுத்தார். ஆண்ட்ரே ரசல் 2 சிக்சர்களுடன் 15 பந்தில் 24 எடுக்க கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் சேர்த்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் மார்கோ ஜேன்சன் மற்றும் நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களத்தில் இறங்கியது.

top videos

    தொடக்க வீரர்களாக அபிசேக் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் களத்தில் இறங்கினர். அபிசேக் 9 ரன்னும், மயங்க் அகர்வால் 18 ரன்னும் எடுத்து வெளியேற அடுத்து வந்த ராகுல் திரிபாதி 9 பந்தில் 20 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பொறுப்புடன் விளையாடிய எய்டன் மார்க்ரம் 40 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். இதுவே சன்ரைசர்ஸ் அணிக்கு கடைசி நேரத்தில் கடும் நெருக்கடி ஏற்பட காரணமாக அமைந்தது. விக்கெட் கீப்பர் கிளாசன் 3 சிக்சர்களுடன் 20 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். அப்துல் சமத் 18 பந்துகளில் 21 ரன்கள் எடுக்க, கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற 9 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி 3 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதையடுத்து சன் ரைசர்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    First published:

    Tags: IPL, IPL 2023