முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : கொல்கத்தா அணியிடம் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்.சி.பி. தோல்வி

IPL 2023 : கொல்கத்தா அணியிடம் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்.சி.பி. தோல்வி

ரன் அவுட் செய்யப்படும் பெங்களூரு அணி வீரர் சுயாஷ் பிரபு தேசாய்

ரன் அவுட் செய்யப்படும் பெங்களூரு அணி வீரர் சுயாஷ் பிரபு தேசாய்

விக்கெட்டுகள் ஒரு முனையில் விழுந்தாலும் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் கோலி 37 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்றை பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் – ஜெகதீசன் களத்தில் இறங்கினர். ஜெகதீசன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியைப் போன்று நிதானமாக விளையாட, ஜேசன் ராய் சிக்சரும் பவுண்டரியுமாக அடித்து தூள் பறத்தினார்.

29 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 சிக்சர் மற்றும் 4 பவுண்டரியுடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜெகதீசன் 29 பந்தில் 27 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 31 ரன்களும் எடுத்தனர். அதிரடியாக ரன்களை சேர்த்த கேப்டன் நிதிஷ் ராணா 21 பந்தில் 4 சிக்சர் 3 பவுண்டரியுடன் 48 ரன்கள் எடுத்தார். ரஸல் 1 ரன்னும், ரின்கு சிங் 18 ரன்னும், டேவிட் வைஸ் 12 ரன்னும் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 200 ரன்களை குவித்தது. இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர்.

top videos

    டூப்ளசிஸ் 17 ரன்னில் 2 சிக்சர்கள் அடித்து ஆட்டமிழக்க அடுத்து வந்த ஷாபாஸ் அகமது 2 ரன்னும், மேக்ஸ்வெல் 5 ரன்னும் எடுத்தனர். கடந்த சில போட்டிகளில் மோசமாக விளையாடி விமர்சனத்திற்கு ஆளான மஹிபால் லோம்ரோர் இந்த போட்டியில் 3 சிக்சர்களுடன் 34ரன்கள் எடுத்தார். விக்கெட்டுகள் ஒரு முனையில் விழுந்தாலும் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் கோலி 37 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் 22 ரன்களும் விஜயகுமார் வைஷாக் 13 ரன்களும் எடுக்க பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    First published:

    Tags: IPL, IPL 2023