முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : கடைசி பந்து வரை நீடித்த த்ரில்லர் மேட்ச்… பஞ்சாபை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா அணி

IPL 2023 : கடைசி பந்து வரை நீடித்த த்ரில்லர் மேட்ச்… பஞ்சாபை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா அணி

பொறுப்புடன் விளையாடி 51 ரன்கள் எடுத்த கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா.

பொறுப்புடன் விளையாடி 51 ரன்கள் எடுத்த கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா.

ஆண்ட்ரே ரஸல் 23 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் 3 பவுண்டரியுடன் அதிரடியாக 42 ரன்கள் எடுத்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா அணி கடைசிப் பந்தில் வெற்றி இலக்கை எட்டியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் கேப்டன் ஷிகர் தவான் ஆகியோர் களத்தில் இறங்கினர். 12 ரன்னில் பிரப்சிம்ரன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளிக்க அடுத்து வந்த பனுகா ராஜபக்சே ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். கடந்த சில போட்டிகளில் அதிரடியாக விளையாடி ரசிகர்களை உற்சாகப்படுத்திய லியாம் லிவிங்ஸ்டோன் 15 ரன்னில் அவுட் ஆனார். விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாலும் கேப்டன் ஷிகர் தவான் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். 47 பந்துகளை எதிர்கொண்ட தவான் 57 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

ஜிதேஷ் சர்மா 21, சாம் கரன் 4, ரிஷி தவான் 19, ஷாரூக்கான் 21, ஹர்ப்ரீத் 17 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 179 ரன்கள் சேர்த்தது.. கொல்கததா அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர் ஜேசன் ராய் 38 ரன்களும், குர்பாஸ் 15 ரன்களும் எடுத்து கொல்கத்தா அணிக்கு நல்ல தொடக்கத்தையே கொடுத்தனர்.

அடுத்து வந்த கேப்டன் நிதிஷ் ராணா பொறுப்புடன் விளையாடி அரைச்சதம் அடித்துஆட்டமிழந்தார். வெங்கடேஷ் ஐயர் 11 ரன்கள் சேர்க்க, ஆண்ட்ரே ரஸல் 23 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் 3 பவுண்டரியுடன் அதிரடியாக 42 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற 2 ரன்கள் தேவைப்பட்டபோது ரின்கு சிங் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். கடைசி பந்து வரை பரபரப்பு நிறைந்த இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது.

top videos
    First published:

    Tags: IPL, IPL 2023