முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்…

IPL 2023 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்…

நிதிஷ் ராணா

நிதிஷ் ராணா

அகமதாபாத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அவர் பங்கேற்கவில்லை.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அணிக்கு புதிய கேப்டனை நிர்வாகம் நியமித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் வெள்ளியன்று தொடங்கவுள்ளது. நடப்பு சீசனில் 10 அணிகள் கோப்பைக்காக போட்டியிடுகின்றன. வெள்ளியன்று நடைபெறவுள்ள தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியனாக இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக ஓய்வில் உள்ளார். அவர் குணம் அடைந்து அணிக்கு திரும்புவாரா அல்லது தொடரை தவிர்ப்பாரா என்பது உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் அணிக்கு தற்காலிக கேப்டனாக நிதிஷ் ராணாவை நிர்வாகம் நியமித்துள்ளது. இடது கை பேட்ஸ்மேனாக இருக்கும் நிதிஷ் ராணா கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா அணியில் விளையாடி வருகிறார். தொடர்ச்சியாக அவர் இதே அணியில் 5 சீசன்களில் விளையாடியிருக்கிறார். 29 வயதாகும் அவரை கேப்டனாக அணி நிர்வாகம் நியமித்துள்ளது.

இந்திய அணிக்காக 3 சர்வதேச டி20 போட்டிகளில் நிதிஷ் ராணா விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆலன் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதில் அகமதாபாத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அவர் பங்கேற்கவில்லை. தற்போது சிகிச்சை மேற்கொண்டு வரும் ஷ்ரேயாஸின் உடல்நிலை முன்னேற்றம் கண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

First published:

Tags: IPL, IPL 2023