முகப்பு /செய்தி /விளையாட்டு / கே.எல்.ராகுலுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது… குணமடைந்து வருவதாக இன்ஸ்டாவில் தகவல்

கே.எல்.ராகுலுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது… குணமடைந்து வருவதாக இன்ஸ்டாவில் தகவல்

லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல்

லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல்

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின்போது கே.எல்.ராகுலின் வலது தொடையில் காயம் ஏற்பட்டது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய அணியின் பேட்ஸ்மேன் கே.எல். ராகுலுக்கு வலது தொடையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் குணம் அடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக கே.எல். ராகுல் செயல்பட்டு வருகிறார். சர்வதேச போட்டிகளில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் அவரிடமிருந்து துணை கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாகவும் கே.எல் .ராகுல் செயல்பட்டு வருகிறார். அணியில் ராகுலின் பங்களிப்பு குறைவாக இருந்தாலும் ஒட்டுமொத்த அளவில் லக்னோ அணி இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின்போது கே.எல்.ராகுலின் வலது தொடையில் காயம் ஏற்பட்டது.

top videos

    இதையடுத்து அவர் ஐபிஎல் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி ஆகியவற்றில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கே.எல் .ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தனக்கு  வலது தொடையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது தான் குணம் அடைந்து வருவதாகவும் கே.எல்.ராகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். அவரை விரைந்து குணம் அடைய கிரிக்கெட் பிரபலங்கள் திரைத்துறையினர் உள்ளிட்டோர் வாழ்த்து கூறியுள்ளனர்.

    First published:

    Tags: IPL, IPL 2023