முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : கொல்கத்தாவிற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி பேட்டிங்

IPL 2023 : கொல்கத்தாவிற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி பேட்டிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் சென்னை அணி 4-இல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் பாயின்ட்ஸ் டேபிளில் 3 ஆவது இடத்தில் உள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் சென்னை அணி 4-இல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் பாயின்ட்ஸ் டேபிளில் 3 ஆவது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 6 போட்டிகளில் 2 இல் மட்டுமே வெற்றி பெற்று பாயின்ட்ஸ் டேபிளில் 8 ஆவது இடத்தை பெற்றுள்ளது. இதுவரை சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடந்த போட்டிகளில் சென்னை அணி 17 முறையும் கொல்கத்தா அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

சென்னை அணியின் பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, ஷிவம் துபே ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். மற்ற பேட்ஸ்மேன்களும் பொறுப்புடன் விளையாடினால் சென்னையின் வெற்றியை தடுப்பது கடினம். பவுலிங்கில் ஜடேஜா, துஷார் தேஷ் பாண்டே, மஹீஷ் தீக்சனா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இவை அனைத்திற்கும் மேலாக தோனியின் கேப்டன்ஷிப் அணிக்கு வெற்றியை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா தான் ஒரு சிறந்த ஆல் ரவுண்டர் என்பதை கடந்த சில போட்டிகளில் நிரூபித்துள்ளார். ஆன்ட்ரே ரஸல் ஃபார்ம் இல்லாமல் இருப்பது கொல்கத்தாவுக்கு பலவீனமாக பார்க்கப்படுகிறது. ஜேசன் ராய், ஜெகதீசன், வெங்கடேஷ் ஐயர், ரிங் சிங் உள்ளிட்டோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் சென்னை அணியை சமாளிக்கலாம்.

சென்னை அணியில் இன்று விளையாடும் வீரர்கள் - ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா

top videos

    கொல்கத்தா அணியில் இன்று விளையாடும் வீரர்கள் - என் ஜெகதீசன், ஜேசன் ராய், நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸ்ஸல், ரின்கு சிங், சுனில் நரைன், டேவிட் வைஸ், குல்வந்த் கெஜ்ரோலியா, சுயாஷ் சர்மா, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி

    First published:

    Tags: IPL, IPL 2023